அன்னாசிப்பழத்தின் பக்க விளைவுகள்: அன்னாசிப்பழம் ஒரு இனிமையான சுவை கொண்டது மற்றும் கோடையில் நம்மை குளிர்ச்சியாக இருக்க உதவும். அன்னாசிப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் மூட்டு தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனைப்போன்று உடலில் உள்ள காயங்கள் விரைவில் ஆறவும் உதவி செய்கிறது. அன்னாசிபழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் மக்னீசியம் காரணமாக எலும்புகளின் வலிமை அதிகரிக்கிறது. அதிகளவு இருக்கும் நார்ச்சத்துக்கள் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க பெரும் உதவி செய்கிறது. எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அளவிற்கு அதிகப்படியான அன்னாசிப்பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதோடு, வைட்டமின் சி நிறைந்த இந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் நன்றாக பழுக்காதவ்பழம் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.


அன்னாசிப்பழங்களை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்:


அன்னாசிப்பழத்தில் அதிக குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளது. சிலருக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் காணப்படுகிறது. அதில் அன்னாசியும் ஒன்று. இதனால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் அளவு 15 கிராம். எனவே இதனை சாப்பிடும் போது அளவோடு உட்கொள்ள வேண்டும். அன்னாசிப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் இருக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்கும். 


அன்னாசிப்பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இந்த நொதி நமது உடலில் பல வித எதிர்வினைகளை ஏற்படுத்தும். இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளி எடுத்துக் கொள்பவர்கள், இதனை அதிகம் சேர்த்து எடுத்துக் கொண்டால், இரத்தப்போக்கு அதிகமாகும். 


அன்னாசிப்பழத்தின் அமிலத்தன்மையின் விளைவாக ஈறுகள் மற்றும் பற்கள் பாதிக்கப்படக்கூடும். மேலும், இது பற்குழி மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம். அன்னாசிப்பழம் நமது பற்களில் அதிகளவு கரையை ஏற்படுத்தும். பற்களின் எனாமல் மீதும் எதிர்பாராத தாக்கம் ஏற்படும். பல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், அன்னாசிபழத்தை நீரில் கழுவி சாப்பிடுவது நல்லது.


மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்!


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிடும் பட்சத்தில், கருகலையவும் வாய்ப்புகள் உள்ளது என சிலர் கூறுகின்றனர். கர்ப்பகால துவக்கம் மற்றும் பிரசவ கட்டங்களில் அன்னாசிப்பழத்தை பெண்கள் உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.


ஆண்டி பயாடிக்ஸ் மற்றும் வலிப்பு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள், அன்னாசிப்பழத்தை தவிர்ப்பது நல்லது. அன்னாசிபழத்தில் இருக்கும் ப்ரோம்லைன், மருந்துகளுடன் வினை புரிந்து உடலில் பிரச்சனைகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.


அன்னாசி பழச்சாறு பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இது கடுமையான வாந்திக்கும் வழிவகை செய்யும். அதனால் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளக் கூடாது.


பொறுப்புத் துறப்பு: இது ஒரு தகவல் தரும் பகுதி, உங்கள் உணவில் ஏதேனும் பெரிய மாற்றத்தைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.


மேலும் படிக்க | Beetroot Parotta: குழந்தைகளை ஹெல்தியா சாப்பிட வைக்கனுமா? இந்த பீட்ரூட் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ