இன்றைய வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக, கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாக உள்ளது. கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதே போன்று நீண்ட நேரம் தலையை சாய்த்து, மொபைல் விளையாடும் நபர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கழுத்து வலியை அலட்சியப்படுத்தி கவனிக்காமல் விட்டு விட்டால், நரம்பியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து விடுபட, தசையை வலிமையாக்கக்கூடிய பயிற்சிகள் மிகவும் பலன் தரும். கழுத்து வலியுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள், கழுத்துத் தசைகளில் விறைப்புத் தன்மை, கழுத்தின் அசைவுகள் தடைபடுதல், கழுத்துப் பகுதியில் வலி, கைகள் மற்றும் தோள்களில் வலி, ஒற்றை தலைவலி ஆகியவை ஆகும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பலர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கான சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் பயிற்சியின் உதவியுடன் வலியை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.


தோள்களுக்கான பயிற்சிகள்


நமது மூளையின் நரம்புகள் தோள்கள் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. கழுத்துவலி ஏற்படும் போதெல்லாம், நேராக நின்று கொன்று, உங்கள் தோள்களின் மேல் பகுதியை வட்ட இயக்கத்தில் சுழற்றவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!


கழுத்து பயிற்சி


கடினமான கழுத்தை எளிதாக்குவதற்கான எளிய வழி, முடிந்தவரை மெதுவாக மேலும் கீழும் பார்ப்பது போல் பயிற்சி செய்வது. அதோடு, முதுகை வளைக்காமல் நேராக நின்று கொண்டு, கழுத்தை ஒரு முறை இடது பக்கமாகவும், பின்னர் வலது பக்கமாகவும் மாறி மாறி கழுத்தை அசைக்க வேண்டும். இதை 5-8 முறை செய்வது சிறந்த பலனைத் தரும்.


நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பயிற்சி


இந்தப் பயிற்சியைச் செய்ய, நாற்காலியில் நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை இரு முழங்கால்களிலும் வைத்து வலது மற்றும் இடது பக்கம் அசைக்கவும். இதனால், நரம்புகளுக்கு பயிற்சி கிடைத்து, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


கழுத்து பயிற்சி


இந்த பயிற்சியை செய்வதற்கு இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து மெதுவாக கும்பிட வேண்டும். முதலில் வலது பக்கம் சாய்ந்து பின் இடது பக்கம் சாய்க்கவும். இந்த பயிற்சியை சுமார் 10-12 முறை செய்யவும். இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கழுத்து வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், கழுத்துவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சஞ்சீவி பயிற்சி.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கொத்தமல்லி தண்ணீர்..! இதோ ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ