கொரோனாவின் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் குறைந்து வரும் போதிலும், பாதிப்புகள் இன்னும் லட்சக்கணக்கில் தான் உள்ளது. இந்த அலையின் போது, பெருமளவிலான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இதில் ஒரு நிம்மதி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் குணமடைந்தும் வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் கொரோனா தொற்றிலிருந்து (Corona Virus) குணமடைந்து விட்டாலும்,  பெரும்பாலான, மக்களுக்கு சோர்வு அதிகம் உள்ளதாகவும், பலவீனமாக உணர்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய நிலைக்கு உடல் நிலை திரும்ப, பாதிக்கப்பட்ட மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ள உணவு முறையை கடைபிடித்தால், விரைவில் உடல் நிலை பழைய படி பிட் ஆக மாறும். 


1. நாள் முழுவதும் போதுமான அளவு வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.


2. குணமடைந்த பிறகு, உடனடியாக அதிக அளவில் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளை மெது மெதுவாக தொடங்குங்கள்.


3.  குணமடைந்த பிறகு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்.  போதுமான தூக்கம் இருப்பது மிகவும் முக்கியம்.


ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?


4. நல்ல சத்தான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள்.


5. கோவிட் -19  (COVID-19) தொற்று பாதிப்பு சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை சரியான நேரத்தில் தவறாமல், எடுத்துக் கொள்ளுங்கள்.


6. உங்களுக்கு வேறு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்து, அதற்காக சிகிச்சையில் இருந்தால், அதற்கான மருந்தையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.


7. உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியம். உடல் வெப்பநிலையை அளப்பது, இரத்த அழுத்தத்தை அளவிடுவது, சர்க்கரை, நாடி துடிப்பு, ஆக்சிமீட்டர் உதவியுடன் ஆக்ஸிஜனை சரிபார்த்துக் கொள்வது ஆகியவை மிகவும் முக்கியம்.


ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்


8. குணமடைந்த பிறகும் உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்கவும். மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு அவர்கள் பரிந்துரைத்த படி, இருமல் சிரப் எடுத்துக் கொள்ளலாம்.


9. கொரோனா பாதிப்பு இருந்த சமயத்தில், உங்களுக்கு ஆக்சிஜன் அளவு 95 க்கும் குறைவாக இருந்திருந்தாலோ, மார்பு வலி போன்றவை இருந்திருந்தாலோ, குணமடைந்த பிறகு உடல் நிலையில், சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


10. புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்துணவுகள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இவற்றை கடைபிடித்தால், நீங்கள் விரைவாக குணமடைந்து ஆரோக்கிய உடல் நிலையை மீண்டும் அடையலாம்.


ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!