Cooking Tips of Amla: நெல்லிக்காய் சாதம், நெல்லிப் பச்சடி செய்வது சுலபம் தெரியுமா?
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் அருமருந்தாக பலனளிக்கிறது. நெல்லிக்காயை சாதமாகவும், பச்சடியாகவும் செய்து ருசியாக சாப்பிடலாம்
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் அருமருந்தாக பயனளிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கவும், சரும நலன், கூந்தல் பாதுகாப்பு என ஆரோக்கியத்தை அளிக்கும் நெல்லிக்காய், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நெல்லிக்காயை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம், சாறு எடுத்து ஜூஸாகவும் குகடிக்கலாம். தூள் வடிவில், சர்க்கரை நீரில் ஊறவைத்து மொரப்பாவாக அல்லது ஊறுகாயாக, சாப்பிடலாம்.
அதேபோல் நெல்லிக்காயை பச்சடி செய்தும், நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய் பச்சடி மற்றும் நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி என்பது தெரியுமா?
Also Read | வெள்ளைபடுகிறதா? கவலை வேண்டாம், சுலபமான தீர்வு
நெல்லிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 6,
தயிர் - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு
Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும், நெல்லிக்காயை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய நெல்லிக்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் அரைத்த நெல்லிக்காய் விழுது, கறிவேப்பிலை போட்டு நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நெல்லிக்காய் பச்சடியில் சேர்க்கவும்.
நெல்லிக்காய் சாதம் செய்வதும் சுலபமானது. சுவையும் சத்தும் மிகுந்தது இந்த சாதம்.
நெல்லிக்காய் சாதம்: தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 6
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - ½ தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வேர்கடலை - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
Read Also | Weight Loss: எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?
செய்முறை: சாதத்தை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். பிறகு துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
ஆற வைத்த சாதத்துடன் நெல்லிக்காய் கலைவையை சோ்த்து கிளற வேண்டும். விருப்பப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம். நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி அருமையாக இருக்கும். சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி…
Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR