புதுடெல்லி: கச்சிதமான உடல்வாகு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. எடையை குறைத்து, உடலை சிக்கென்று கச்சிதமாக வைத்துக் கொள்ள உடல் பருமன் ஒரு தடையாக இருக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதாக எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.
கூடுதல் எடையை அகற்ற மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் எடைகுறைப்பு மாத்திரைகளும் ஒன்று. இந்த மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக் கொள்வோம்.
உங்கள் உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை எரிப்பதாகக் (fat burner) கூறும் எந்தவொரு உணவு நிரப்பியும் அல்லது தொடர்புடைய பொருளும் கொழுப்பு பர்னர் என குறிப்பிடப்படுகிறது. 40 வயதிற்குப் பிறகு, உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து, எடை அதிகரிக்க தொடங்கும். எனவே, மக்கள் கொழுப்பு எரியும் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்கின்றனர்.
அதிகப்படியான கொழுப்பைத் தவிர்ப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவோ அல்லது அதிகரிக்கவோ, உடல் கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைக்கவோ அல்லது ஆற்றலாக மாற்றவோ இந்த சத்து மாத்திரைகள் எடுக்கப்படுகின்றன.
Read Also | IVF கருவுறுதல் சிகிச்சை பெறுவதற்கு பெண்ணின் உடல் எடை தடையா?
சில கொழுப்புகள் இயற்கையாகவே கரைகின்றன, பொதுவாக, சப்ளிமெண்ட்ஸ் அல்லது மாத்திரைகள் பசியைக் குறைக்கும், கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கும், கொழுப்பு கரைவதை அதிகரிக்கும். இந்த மாத்திரைகள் எந்த சத்துகளுக்கானவை?
உயர் புரதம் அல்லது புரதச் சத்து சப்ளிமெண்டுகள் (High Protein or Protein Supplements): இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது உடல் தசையை பாதுகாக்க உதவுகிறது.
கார்சீனியா கம்போஜியா (Garcinia Cambogia)
பழத்தில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் உள்ளது, இது கார்சீனியா கம்போஜியா சாற்றில் செயலில் உள்ள மூலப்பொருள் ஆகும், இது உணவு மாத்திரையாக விற்பனை செய்யப்படுகிறது.
குளுக்கோமன்னன் (Glucomannan)
யானை யாமின் வேர்களில் காணப்படும் ஒரு வகை நார்ச்சத்து ஆகும். குளுக்கோமன்னன் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற பொருளாக மாறுகிறது. இது குடலில் இருந்து, வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை ஊக்குவிக்கிறது, இதனால் பசி எடுப்பது குறைந்து, சாப்பிடும் அளவு குறையும்.
Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?
செயற்கையாக கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்டுகளின் பக்க விளைவுகள்
ஒவ்வாமை: இந்த மாத்திரைகள் தோல் ஒவ்வாமை, அரிப்பு, வயிற்று உபாதைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அவதிப்படலாம்.
இதற்கு காரணம், கொழுப்பு பர்னர்களில் காணப்படும் தூண்டுதல்கள் (Stimulants) தூக்க முறைகளை மாற்றுகின்றன, இது உங்கள் இதயத் துடிப்பையும் அதிகரிக்கும், இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பு: வேகமான வளர்சிதை மாற்றத்தின் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயம் வழக்கத்தை விட அதிகமாக துடிக்கலாம்.
நடத்தை மாற்றம்: மனநிலை மாற்றங்கள், பதட்டம் அதிகரிப்பது, உணர்ச்சித் தொந்தரவுகள், எரிச்சல் மற்றும் பதட்டம் ஆகியவை இந்த சப்ளிமெண்டுகளால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும்.
Read Also | Health News: தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன நன்மை தெரியுமா?
வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம். கொழுப்பு எரிக்கும் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டால், வயிற்றில் வாயு அல்லது வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குடல் இறக்கம் மலக்குடலில் பிரச்சனை, சில நேரங்களில் ரத்தப்போக்குடன் மலம் கழிவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிறுநீரக பிரச்சினைகள்: இந்த சப்ளிமெண்டுகளில் இருக்கும் அதிகப்படியான புரதம் சிறுநீரக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். காஃபின் அல்லது டானின் (caffeine or tannin) நுகர்வு, பி 12, இரும்பு போன்ற சில வைட்டமின்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
எனவே இயற்கையான முறையில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடல் எடை குறைக்க (Weight Loss) முயற்சிக்கவும். கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்டுகள் என்றுமே பிரச்சனைகளுக்கு ஆணிவேராக மாறலாம்.
Also Read | Foxtail millet: ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR