High Cholesterol: இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்
Health Tips: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதை எவ்வாறு கண்டறிவது மற்றும் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம்.
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இவை அவ்வளவு எளிதாக அறிகுறிகளை வெளியில் காட்டிவிடாது. இருப்பினும் உடலின் மற்ற பாகங்களான கால்கள் அல்லது நகங்கள் போன்றவை சில சமயங்களில் சில அறிகுறிகளைக் வெளிப்படுத்தும். இதனை கவனித்து தக்க சமயத்தில் நீங்கள் மருத்துவரை அணுகலாம். கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். எனவே உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் எவ்வாறு கண்டறிந்து கட்டுப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ராலை எவ்வாறு கண்டறிவது
கொலஸ்ட்ரால் காரணமாக உடலின் சில பகுதிகளில் விரைவான வலியின் அறிகுறிகள் தோன்றும். தமனிகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் அவற்றை சேதப்படுத்துகிறது, இது தசைகளில் விறைப்பு மற்றும் கடுமையான வலிக்கு வழிவகுக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது தொடையின் கீழ் பகுதி, முழங்கால் மற்றும் கால்களில் வலியின் அறிகுறிகள் தோன்றும். கால்களின் தசைகள் விறைப்பதால், நடப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். எனவே கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க | 'அந்த’ விசயத்துக்கு மட்டுமில்ல! ‘உடல் பருமன்’ பிரச்சனையையும் தீர்க்கும் அத்திப்பழம்
வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்யுங்கள்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது மிகவும் அவசியம். ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கிறது, அத்தகைய விஷயங்களை உடனடியாக கைவிடுவது நன்மை பயக்கும்.
சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
சரியான உணவு இல்லாமல் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
எடை கட்டுப்பாடு
உடல் பருமனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எடையைக் கட்டுப்படுத்துவது அவசியம். அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை குறைக்கவும். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் செயற்பாட்டை அதிகரிக்கவும்
உடல் செயல்பாடு கொலஸ்ட்ராலை குறைக்கிறது. கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ