நமது மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான ஒன்று கெட்ட கொலஸ்ட்ரால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்டராலின் காரணமாக மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளும், நமது ஆரோக்கியமற்ற நடத்தைகளும் தான் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிகளவு கொலஸ்ட்ரால் இதயம் தொடர்பான பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் காணப்படும் ஒருவகை மெழுகு பொருளான கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ராலாக மாறும்போது தான் நமது உடலுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | பால் டீ குடிக்கிறீங்களா? இந்த 7 பிரச்சனை உங்களுக்கு வரலாம்
அதிகளவு கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. பொதுவாக கொலஸ்ட்ரால் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை, இருப்பினும் உங்கள் உடலில் வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்து கொலஸ்ட்ரால் அதிகளவில் உள்ளது என்பதை நீங்கள் கண்டறிய முடியும்.
அதிக கொலஸ்டராலின் முக்கியமான ஐந்து அறிகுறிகள்:
1) கால்கள், கைகள் போன்றவற்றில் உணர்வில்லாமல் போவது.
2) வெளிறிய நகங்கள்.
3) தோலில் ஊதா நிற வலை போன்ற அமைப்பு ஏற்படுவது.
4) சாந்தெலஸ்மா தோன்றுதல் அதாவது கண் இமைகளின் மூலைகளில் தோன்றும் மஞ்சள் நிற வளர்ச்சி.
5) சொரியாசிஸ்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நீங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான வழியில் கொலஸ்ட்ராலை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்க வேண்டும். அப்படி இதனை கண்டுகொள்ளாமல் விட்டீர்கள் என்றால் உங்களுக்கு பெருந்தமனி தடிப்பு, இதய நோய், பக்கவாதம், புற வாஸ்குலர் நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல வித மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
மேலும் படிக்க | ஆண்மைக்குறைவுக்கு என்டு கார்டு போடுங்க! ஆண்களுக்கான அருமருந்து இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ