எடை இழப்புக்கு சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்த நிபுணர்களும் பரிந்துரைப்பதில்லை. அளவு மற்றும் பகுதியைக் கட்டுப்படுத்துவது முக்கியம். சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் சில உணவுகளை சரியான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால், எடையைக் கட்டுப்படுத்தலாம். அத்தகைய உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை காளான் ஆகும். எலுமிச்சை காளான் செய்முறையில் உள்ள பொருட்கள் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த செய்முறை ஆரோக்கியமானது மற்றும் மிகவும் சுவையானதும் கூட. எனவே எடை இழப்புக்கான எலுமிச்சை காளான் ரெசிபி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை காளானுக்கு தேவையான பொருட்கள் இதோ  (Lemon Mushroom Recipe for Weight Loss)
1 கிண்ணம் ஃபிரெஷ் காளான்கள்
1/4 கப் எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் ஆர்கனோ இலைகள் (Oregano Leaves)
1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
இதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
3 பூண்டு துண்டுகள்.
மிளகு பொடி.
ருசிக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை.
இந்த ரெசிபியை தயார் செய்ய, நறுக்கிய குடமிளகாயையும் சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | எருக்கஞ்செடி ஓரம் ஒளிந்திருக்கும் அற்புத பலன்கள்... பல்வேறு நோய்களுக்கு மருந்து


எலுமிச்சை காளான் தயாரிப்பது எப்படி  (Lemon Mushroom Recipe for Weight Loss)
காளான் துண்டுகளை சிறிய அளவில் வெட்டுங்கள். அதை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும். அதில் எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை போன்றவற்றை நன்கு கலக்கவும். அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய கேப்சிகத்தை சேர்க்கவும். கடைசியாக 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் / ஆலிவ் எண்ணெயை கலக்கவும்.


இதன்பிற்கு கடாயை சூடாக்கவும். கேஸை சிம்மில் வைக்கவும். அனைத்து பொருட்களையும் கடாயில் போடவும். மூடி வைத்து, சிறிது நேரம் கிளறி சமைக்கவும். இதற்கு 5-7 நிமிடங்கள் ஆகும். இதை நன்கு கிரில் செய்யலாம். சமைத்த பிறகு, ஓரிகானோ இலைகள் மற்றும் கருப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம். இந்த சுவையான செய்முறை உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும்.


எடை இழப்புக்கு காளான்கள் எவ்வாறு உதவுகின்றன (Mushroom for Weight loss)
வெள்ளை காளானில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது. இதில் கலோரிகளும் குறைவு. அதேபோல் காளான்கள் வைட்டமின் சி, செலினியம், குளுதாதயோன் மற்றும் கோலின் உள்ளிட்ட பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களின் ஒரு வளமான மூலமாகும். இது புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் செலினியம் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அனைத்து வகையான காளான்களும் பசியை அடக்கி, கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும்.


எலுமிச்சை எடையைக் கட்டுப்படுத்துகிறது  (Lemon Juice for Weight Control)
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எடையைக் குறைக்கவும் இது உதவும். கொழுப்பை எரிக்கும்போது, ​​எலுமிச்சம்பழ நீரை தொடர்ந்து குடிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. அதன்படி அதிக கலோரி ஆற்றல் பானங்களுக்கு பதிலாக குறைந்த கலோரி எலுமிச்சை தண்ணீரை பயன்படுத்தலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் அமிலம் முதல் நீரிழிவு வரை... பிரியாணி இலை இருந்தால் போதும்...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ