எலுமிச்சம் பழம், நீரேற்றம், வைட்டமின் சி அளவை அதிகரிக்கும் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் கொண்டது. வைட்டமின் சி என்ற முக்கியமான ஆக்ஸிஜனேற்ற சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களைக் கொண்ட எலுமிச்சம் பழத்தின் ஜூஸ், மிகவும் ஆரோக்கியமானது. ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான எலுமிச்சை நீர் உடல் பருமனைக் குறைத்து வெப்பத்தைத் தணிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் பண்பு என எலுமிச்சை, எக்கச்சக்க ஆரோக்கிய குணங்களைக் கொண்டிருந்தாலும், அதிகப்படியான எலுமிச்சை நீரும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக எலுமிச்சையை எடுத்துக் கொண்டால், அது உங்கள் பல் எனாமலை அரித்துவிடும்.


எலுமிச்சை நீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சனைகளை அதிகரிக்கும். எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.


காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழம் குடிப்பதால் பல உடல்நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் தீமைகள் பற்றித் தெரிந்தால், எலுமிச்சை ரசம் குடிப்பதை நீங்கள் இயல்பாகவே குறைத்துக் கொள்வீர்கள். உண்மையில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?


மேலும் படிக்க | RO வேஸ்ட் வாட்டரை குளிக்க பயன்படுத்தலாமா வேண்டாமா? சுகாதார நிபுணர்களின் அட்வைஸ்


GERD மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ்
ஒரு ஆய்வின் படி, நீங்கள் அமில உணவை அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (GERD) மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். எலுமிச்சை தண்ணீரும் இதற்கு விலக்கல்ல. எலுமிச்சையில் உள்ள அமிலம் உணவுக் குழாயின் உள் புறத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ நீரை குடித்தால் அது மோசமாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு ஏற்கனவே அசிடிடி பிரச்சனை இருந்தால், தினமும் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும்.


அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் நீரிழப்பு


ஆய்வுகளின்படி, எலுமிச்சை நீரில் அஸ்கார்பிக் அமிலம் அல்லது வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே உங்கள் உடலுக்கு ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது, இதன் காரணமாக நமது சிறுநீரகம் அதிக சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். உடலுக்கு தேவையான நீர் குறைந்து போகும் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.


அல்சர் பிரச்சனை
அதிக அளவு எலுமிச்சை நீரை உட்கொள்வது வாய், நாக்கு, கன்னங்கள் அல்லது கன்னங்களுக்குள் புண்களை ஏற்படுத்தும். எனவே, எலுமிச்சை நீரை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம்.


எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் வேறு சில தீமைகள்


  • உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்

  • செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்

  • எலும்புகள் பலவீனமாகலாம்

  • தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்

  • ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். ...

  • புற்றுநோய் ஆபத்து. ...

  • எலும்புகளில் பாதகமான விளைவு


எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், அதன் அதிகப்படியான நுகர்வு உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு எதுவுமே ஒரு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ