COVID-19 நோயாளிகளின் நுரையீரலில் சுரக்கும் திரவ ஜெல் மருந்தாக பயன்படும்! தெரியுமா?
கோவிட் -19 மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்த சில நோயாளிகளின் நுரையீரலில் (lungs) ஒரு ஜெல்லி (jelly) உருவாகும். அந்த ஜெல்லியில் உள்ள கூறானது புதிய பயனுள்ள சிகிச்சைகளுக்கு முக்கியமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: கோவிட் -19 மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்த சில நோயாளிகளின் நுரையீரலில் (lungs) ஒரு ஜெல்லி (jelly) உருவாகும். அந்த ஜெல்லியில் உள்ள கூறானது புதிய பயனுள்ள சிகிச்சைகளுக்கு முக்கியமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
"இந்த ஜெல்லி உடலில் உற்பத்தியாவதை மட்டுப்படுத்தும் அல்லது ஒரு நொதியின் மூலம் ஜெல்லியை உடைக்கும் சிகிச்சைகள் ஏற்கனவே உள்ளன" என்று ஸ்வீடனில் உள்ள உமே பல்கலைக்கழகத்தின் (Umeå University) ஆய்வு ஆராய்ச்சியாளர் அர்பன் ஹெல்மேன் (Urban Hellman) கூறுகிறார்.
"cortisone, கோவிட் -19 இல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணத்தையும் எங்கள் கண்டுபிடிப்புகள் தெளிவக்கும்" என்று ஹெல்மேன் கூறுகிறார்.கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் ஸ்கேன் செய்யும்போது, அதில் வெள்ளை திட்டுகள் இருப்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டனர். அதோடு, உயிரிழந்த சில கோவிட் -19 நோயாளிகளின் பிரேத பரிசோதனையில் நுரையீரலில் திரவ ஜெல்லி நிரம்பியிருப்பதையும் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்கும்போது, நீரில் மூழ்கிய ஒருவரின் நுரையீரலை ஒத்தது போல் இருந்திருக்கிறது.
இந்த ஜெல்லி எப்படித் தோன்றியது என்பது அறியப்படவில்லை. Journal of Biological Chemistry என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஜெல்லி hyaluronan என்ற கூறைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.
மனித உடலில் hyaluronan இருப்பது இயல்பானது, வெவ்வேறு திசுக்களில் பல்வேறு செயல்பாடுகள் இருக்கும். ஆனாலும் கூட, இது பொதுவாக இணைப்பு திசுக்களின் பயனுள்ள பண்புகளில் ஒன்றாக காணப்படுகிறது.
உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகும் ஆரம்ப கட்டங்களில் Hyaluronan முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டுமல்ல, அழகுத் துறையில் உதட்டை பெரிதாக்குதல் (lip augmentation) மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக ஹைலூரோனன் (hyaluronan) செயற்கையாக தயாரிக்கப்படுகிறது.
தனது நீண்ட மூலக்கூறுகளின் வலையில் அதிக அளவு தண்ணீரை பிணைக்க முடியும் என்பதால், hyaluronan ஜெல்லி போன்ற ஒரு பொருளை உருவாக்குகிறது.கோவிட் -19 நோயாளிகளின் நுரையீரலில் alveoliவில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஹைலூரோன்னின் வேலையாகும். இதன் விளைவாக நோயாளிக்கு வென்டிலேட்டர் பராமரிப்பு தேவைப்படுகிறது, நிலைமை மிகவும் மோசமகும்போது, சுவாசக் கோளாறால் மரணம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, பித்தப்பையில் (gallbladder) பிரச்சனை ஏற்படுவது உள்ளிட்ட பிற நோய்கலுக்கு சிகிச்சைக் கொடுக்கும் போது, ஹைலூரோனன் உற்பத்தியை குறைக்க ஹைமெக்ரோமோன் (Hymecromone) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஹைலூரோனானை திறம்பட சிதைக்கக்கூடிய ஒரு நொதியும் (enzyme) உள்ளது.
அழகு சிகிச்சை கொடுக்கப்படும்போது, அது பலனளிக்காவிட்டாலோ, அல்லது எதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலோ, சிகிச்சையை உடனடியாக நிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் இந்த நொதியைப் பயன்படுத்தலாம்.
ஹைலூரோனனின் உற்பத்தியைக் குறைப்பதற்கு கார்டிசோன் (cortisone) பயன்படுகிறது. ஒரு பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வெளியான தரவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. ஆய்வின் முதல்கட்ட பரிசோதனையின்போது, கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு cortisone மருந்து கொடுத்து சிகிச்சை செய்தால், அது நல்ல பலனளிப்பதக தெரியவந்தது.
"அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கார்டிசோனின் பொதுவான அம்சமானது, நம்பிக்கைக்குரிய பூர்வாங்க முடிவுகளைத் தருவதாக முதலில் நம்பப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு மேலதிகமாக, கார்டிசோன் ஹைலூரோனன் உற்பத்தியையும் குறைக்கலாம், நுரையீரலில் உருவாகும் ஜெல்லியின் அளவையும் குறைக்கலாம்" என்பது தெரிய வந்துள்ளதாக Hellman குறிப்பிடுகிறார்.
Read Also | கொரோனா பரவுவதை சரிபார்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கும் அரசு: பிரகாஷ் ஜவடேகர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR