எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
Food For Strong Bones: வயது ஏற ஏற, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய ஆரம்பிக்கும். குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு அதிகரிக்க தொடங்குகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆரோக்கியமான உடலுக்கு, எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது முக்கியம். வயது ஏற ஏற, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய ஆரம்பிக்கும். குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு அதிகரிக்க தொடங்குகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் எலும்புகள் வளர வளர, எலும்பு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன், வேறு சில ஊட்டசத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எலும்புகளும் பலவீனமடையத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக பராமரிக்க எந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கான உணவுகள்
1. எலும்புகளை வலுப்படுத்த, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இருந்து உடலுக்கு நல்ல அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கிறது. மேலும், வெல்லம் சர்க்கரைக்கான ஆரோக்கியமான (Health Tips) மாற்றாகவும் கருதப்படுகிறது.
2. சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் காணப்படுகின்றன. இதற்கு ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, ஸ்ட்ராபெரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
3. தினமும் முட்டை சாப்பிடுவதால் எலும்புகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் உணவில் முட்டையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. முட்டை மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கும்.
மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து
4. எலும்புகளை வலுப்படுத்த, முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களைச் சேர்க்கவும்.
5. உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பீன்ஸ் அதிகம் சேர்க்க வேண்டும். இவை வைட்டமின் ஏ, சி மற்றும் கே மற்றும் ஃபோலிக் அமிலத்தை வழங்குகின்றன.
6. உடலில் கால்சியம் குறைபாட்டை போக்க தினமும் 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் போதும். இதனால் எலும்புகள் வலுவடையும்.
7. எலும்பு ஆரோக்கியத்திற்கு காளான்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காளான் சாப்பிடுபவர்களுக்கு கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 கிடைக்கும்.
8. எலும்புகளை வலுப்படுத்த, உங்கள் உணவில் பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
9. எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும் கொய்யாவில் கால்சியம் ஏராளமாக உள்ளது. உங்களுக்கு வலுவான எலும்புகள் வேண்டுமானால், கொய்யாவை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
10. ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க வாழைப்பழத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், கால்சியம் குறைந்து எலும்புகள் பலவீனமடையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ