வயோதிகம் வருவதற்கு முன்னரே மக்களை பெரும் பாடு படுத்துவது இரத்த அழுத்த பிரச்சணைகள் தான். இதை எப்படி குறைப்பது?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த ரத்த அழுத்தம், மிகுந்த ரத்த அழுத்தம் என இரண்டு வகைகளில் ரத்த அழுத்தத்தினை வகைப்படுத்துகின்றனர். இந்த இரத்த அழுத்த பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பது எவ்வாறு என்புது குறித்து பிரேசிலை சேர்ந்த மருத்துவர் ஆய்வு மேற்கொன்டுள்ளார்.


இந்த ஆய்வின் முடிவில் அவர் அறிந்துள்ளதாவது... மென்மையான பாடல்களுடன் தங்கள் வழக்கமான மருந்துக்களை எடுத்துக்கொண்டால் எளிதில் ரத்த அழுத்த பிரச்சனைகளை சமாளிக்கலாம் என கண்டறிந்துள்ளார்.


பிரேசிலின் சோ பௌலோ மாநில பல்கலையில் பேராசிரியராக இருப்பவர் விக்டர் என்கர்சியா. இவர் இரத்த அழுத்த பிரச்சணைகள் குறித்து அறிந்துக்கொள்ள தனது ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.


இந்த ஆய்விற்காக இவர் இரத்த அழுத்த பிரச்சணைகளால் மருந்துகளை எடுத்துவரும் 65 நோயளிகளை கொண்டு விடை கண்டுள்ளார். பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இயல்பான நாட்களில் அவர்களது இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தினை அளந்துக்கொண்ட அவர், அடுத்த நாள் அவர்களை ஓர் இசை கூடாரத்தில் அமரவைத்து இனிமையாக இசையுடன் சுமார் 40-60 நிமிடங்களுக்கு வைத்து அவர்களின் இயல்பான மருந்துக்களையே எடுக்க வைத்துள்ளார்.


பின்னர் அவர்களிடன் இருந்து எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவில் முந்தைய அளிவீட்டில் இருந்து பெருமளவு மாற்றம் தெரிவதினை கண்டறிந்தார். இதனையடுத்தும் இந்த முடிவினை உறுதிப்படுத்திக்கொள்ள அவர பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் முடிவினை அவர் ஆய்வு கட்டுரையாகவும சமர்பித்துள்ளார்.