1 மாதத்தில் வெயிட் லாஸ் பண்ணனுமா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம் குடிக்கவும்
பொதுவாக சுரைக்காய் கறி, பகோடா, கூட்டு அல்லது அல்வா ஆகிய உணவு வகைகள் மிகவும் விரும்பப்படும். ஆனால் நீங்கள் எப்போதாவது சுரைக்காய் சாறு குடித்து நாளை துவக்கியுள்ளீர்களா? இல்லையென்றால், அதை கண்டிப்பாக செய்து பாருங்கள்.
பொதுவாக நமது உடலில் எடை வேகமாக அதிகரித்துவிடும், ஆனால் அதை குறைப்பது என்பதை ஒரு சவாலான விஷயமாகும். அதன்படி சில குறிப்புகள் மற்றும் வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் உடல் எடை நாம் எளிதாக குறைக்கலாம். அதுவும் ஒரே மாதத்தில் குறைந்தது 3 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். எனவே அத்தகைய காய்கறி ஜூஸை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த ஜூஸ் உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். அதுமட்டுமின்றி இந்த ஜூஸ் உங்கள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். அந்த வகையில் எந்த ஜூஸ் எது என்பதையும், எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சுரைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சுரைக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு பச்சை காய்கறியாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது தவிர, போதுமான அளவு தண்ணீரும் சுரைக்காயில் உள்ளது. ஆகையால், இதை உட்கொண்டால் உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் சுரைக்காய் சாறு குடிப்பது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. மிக விரைவாக இதை தயாரித்து குடிக்கலாம். வாருங்கள் இப்போது ணாம் இந்த சுரைக்காய் சாறு உடல் எடை குறைக்க எப்படி பயன்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | நரை முடி முற்றிலும் கருப்பாக மாறனுமா.. வெங்காயம், வெந்தயம், பாதாம் பருப்பு போதும்
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த சாற்றின் உதவியுடன் நீங்கள் எளிதாக தொப்பை கொழுப்பை கரைக்கலாம். உடல் எடையை குறைக்கும் நோக்கத்திற்காக உணவை சார்ந்து இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கான சரியான குறிப்பு எங்களிடம் உள்ளது.
சுரைக்காய்- கற்றாழை - எலுமிச்சை சாறு
சுரைக்காய், கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறுடன் நாளைத் தொடங்கவது சரியான தேர்வாகும், இது உடலை ஊட்டச்சத்துடன் வைத்திருக்கிறது மற்றும் தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சுரைக்காய் சாறு குடிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த முடியும். வேகமாக வளர்சிதை மாற்ற விகிதம் அதிக எடை குறைக்க உதவும். அதனால்தான் உங்கள் எடையைக் குறைக்கும் சாற்றின் முக்கிய மூலப்பொருள் சுரைக்காய் ஆகும்.
எடை இழப்புக்கான சாறு
சுரைக்காய் ஜூஸ் செய்முறையில், சுரைக்காயுடன் மற்ற காய்கறிகளைச் சேர்க்க வேண்டாம், காய்கறியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து, 2 ஸ்பூன் கற்றாழை சாற்றில் உப்பு, எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை கலந்து குடிக்க வேண்டும். சாற்றை வடிகட்ட முயற்சிக்காதீர்கள், இது அதன் நார்ச்சத்தை நீக்கிவிடும். நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சுரைக்காய் சாறு தயாரிக்கப்பட்ட உடனேயே உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அது விரைவில் ஆக்ஸிஜனேற்றப்படும், சிறிது நேரம் வைத்து இதை குடித்தால், சில ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ