COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒலி மாசு ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் ஏராளமாக உள்ளன, அவை பொது சுகாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க உலகளாவிய கவலையாக மாறி வருகின்றன. அவை லேசான மற்றும் நிலையற்ற துன்பம் முதல் கடுமையான மற்றும் நீண்ட கால உடல் பாதிப்பு வரை பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


அதிக ஒலி எழுப்பும் நகரங்கள், பரிந்துரைக்கப்படும் ஒலி அளவுகள் மற்றும் ஒலி மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்வோம்.  


இரவில் சத்தம் தூக்கத்தை சீர்குலைக்கிறது, அது அடுத்த நாள் ஒருவரின் இயல்பான வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் முறையே 22 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் மக்களுக்கு இரைச்சல் மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ளன. 


மேலும் படிக்க | எங்களைக் காப்பாற்றுங்கள்! பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை


யுஎன்இபி அறிக்கை
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) ஒலி மாசுபாடு குறித்த அறிக்கை, 'எல்லைகள் 2022: இரைச்சல், பிளேஸ்கள் மற்றும் பொருத்தமற்றது' ('Frontiers 2022: Noise, Blazes, and Mismatches) என்ற தலைப்பில், உலகின் 61 முக்கிய நகரங்களின் சராசரி ஒலி அதிர்வெண்ணை ஒப்பிடுகிறது.



டாக்கா கூக்குரலிடும் நகரம்
உலகின் 61 அதிக மக்கள்தொகை மற்றும் செல்வாக்குமிக்க நகரங்களில் வங்காளதேச நகரமான டாக்கா அதிக ஒலி மாசுபாட்டைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் இரைச்சல் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது, இது உள்ளூர்வாசிகளின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது.


கணக்கெடுப்பின்படி, டாக்கா 119 டெசிபல் என்ற அளவில் அதிகபட்ச இரைச்சல் அதிர்வெண் (highest average noise frequency) கொண்டதாக உள்ளது.


மேலும் படிக்க | லாரி மீது கார் மோதி விபத்து! 5 பேர் உயிரிழந்த சோகம்


இரைச்சல் அளவு 
1999 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்சமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இரைச்சல் அளவு 55 டெசிபல்களாகும். இது வணிகப் பகுதியில் 70 டெசிபல்களாகும். 2018 திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் இரைச்சல் அதிர்வெண் அளவை 53 dB க்குள் வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டது.


இந்தியாவின் மொராதாபாத் 114 dB உடன் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் 105 dB உடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.


இரைச்சல் அளவு 103 dB உடன், மற்றொரு வங்காளதேச நகரமான ராஜாஷாஹி மற்றும் ஹோ சி மின் நகரம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.


இபாடன் (நைஜீரியா), குபோண்டோல் (நேபாளம்), அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா), பாங்காக் (தாய்லாந்து), மற்றும் நியூயார்க் (அமெரிக்கா) ஆகியவை முதல் பத்து இடங்களுக்குள் சுற்றி வருகின்றன.


மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ


குறைந்த சத்தம் உள்ள நகரங்கள்
அந்த அறிக்கையில், உலகின் முக்கிய 61 நகரங்களில் மெல்போர்னில் ஒலி மாசுபாடு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. மெல்போர்னில் சராசரி ஒலி அதிர்வெண் 20 டெசிபல்கள் மட்டுமே இருக்கிறது. 


ஸ்பெயினின் பார்சிலோனா டெசிபல் அதிர்வெண் 22 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இர்பிட் (ஜோர்டான்), மாட்ரிட் (ஸ்பெயின்) மற்றும் லியோன் (பிரான்ஸ்) ஆகியவை அமைதியான நகரங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன, இவை முறையே 60 dB, 69 dB மற்றும் 60 dB இரைச்சல் அளவுகளை பதிவு செய்துள்ளன.


மேலும் படிக்க | புலம் பெயர முயன்றவர்களை புதைத்துக் கொண்ட மத்திய தரைக்கடல்! படகு விபத்தில் 100 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR