இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் பலி மேற்குவங்கத்தில் நிகழ்ந்தது?...
கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வங்காளத்தில் இறந்துள்ள விவகாரம் தற்போது நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வங்காளத்தில் இறந்துள்ள விவகாரம் தற்போது நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட மருத்துவமனை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நீரிழிவு நோயாளி இறந்துள்ளார். இவர் சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியதாக தெரிவிக்கப்டும் நிலையில், இவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்திருக்காலாம் என சந்தேகிகப்படுகிறது.
குறிந்த இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது இறந்துள்ளதால், சந்தேகம் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து இறந்த நபரின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், விரைவில் முடிவுகள் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகியவற்றுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாவல் கொரோனா வைரஸிற்கான அவரது ரத்தம் மற்றும் துணியால் ஆன மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் காத்திருந்த போதிலும், நீரிழிவு நோயால் அவர் இறந்துவிட்டார் என்று சந்தேகிக்கிறோம் என்று சுகாதார சேவைகள் இயக்குனர் அஜய் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "அந்த நபர் நீரிழிவு நோயாள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தார், எனினும் இன்சுலின் தொடர்ச்சியாக எடுக்கவில்லை. சவுதி அரேபியாவிலிருந்து வீடு திரும்பிய அவர், கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக இன்சுலின் எடுக்கவில்லை. இதன் காரணமாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அவர் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார், எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
"மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நாவல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் இறப்பதற்கான வாய்ப்பு தொலைதூரமானது" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வைரஸால் இறக்கும் நோயாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ள கட்டளைகளின்படி கடைசி சடங்குகளின் போது முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படும் என்று மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
"இறந்தவர் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்ததால் குடும்ப உறுப்பினர்கள் உடலைத் தொட அனுமதிக்க மாட்டார்கள். அவரது இறுதி சடங்குகளைச் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கியர், முகமூடிகள் மற்றும் கையுறைகள் வழங்கப்படும். சோதனை முடிவுகள் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா உள்ளோம்" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.