நாட்டில் முதல் முறையாக இரு இதயத்துடிப்புடன் கேரளாவைச் சேர்ந்த அதிசய மனிதர் உயிர் வாழ்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் செயலிழந்த அந்த நபருக்கு பழைய இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயம் பொருத்தாமல், மருத்துவர்கள் இரண்டு இதயத்தை ஒன்றோடு ஒன்று இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம், இரண்டு இதயங்களும் சுமையை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


சுமார் 3.30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, அவரது மார்புக் குழியில் சிறிய துளையிட்டு வலதுபுறமாக புதிய இதயம் பொருத்தப்பட்டது. வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இரு இதயத்துடிப்பையும் ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 


சுமார் 5 இடங்களில் நோயாளியின் இதயம் இணைக்கப்பட்டது. இடதுபுறம் 3 இடங்களிலும், வலதுபுறம் 2 இடங்களிலும் இணைக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.


இந்த அறுவை சிகிச்சை, அவரது பலவீனமான இதயத்துடிப்பை தடுத்து நிறுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சமச்சீர் நபரான இவரது மரபணுவில் ஆண் மற்றும் பெண்ணுக்கான மரபணு கூறுகள் இணைந்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.