அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து பெண் குழந்தையை 24-வது வாரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மறுபடியும் தாயின் வயிற்றில் வைக்கப்பட்டது. பின்னர் 12 வாரம் கழித்து இரண்டாவது முறையாக அந்த பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16-வது வாரத்தில் மார்கரெட் போயிமர் என்ற அமெரிக்க பொண்ணுக்கு வயிற்றில் கட்டி வளர்ததை கண்டுபிடிக்கபட்டது. இக்கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். 


அதன்படி 23-வது வாரம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 2௦ நிமிடங்களுக்கு நடைப்பெற்றது. கட்டி வெளியே எடுக்கப்பட்டபின்னர் குழந்தையை மறுபடியும் தாயின் வயிற்றுக்குள் வைக்கப்பட்டு, கர்ப்பபையின் வாய் தைக்கப்பட்டது. 


36 வாரங்களுக்குப் பின் அதே குழந்தை ஜூன் 6 அன்று ஆரோகியமாக பிறந்தது. குழைந்தைக்கு லின்னி என்று பெயரிடப்பட்டது.