பல்வேறு வடிவங்களில் பயபடுத்தப்படும் கஞ்சா பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. எந்தவொரு விஷயத்திலும் நன்மையும், தீமையும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் என்பது உண்மை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல, பெயரைக் கேட்டாலே, போதைப்பொருள் என்று நினைக்கும் பலருக்கும் கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் தெரிவதில்லை. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி எப்படி காயத்தையும் ஏற்படுத்தும்.


அதேபோல, மருந்தாக பயன்படுத்த நினைக்கும் கஞ்சா மிகவும் சக்தி வாய்ந்த போதைப்பொருளாகவும் பயன்படுத்துவதால், இதன் பெயரே பலருக்கு பீதியைக் கொடுக்கிறது. 


உண்மையில், கஞ்சா செடியின் அனைத்து பாகங்களும் பயன்பாட்டுக்குரியவை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வலிநிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது.  


READ ALSO | பப்பாளிய சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா? கவனமா இருங்க


கஞ்சாவில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதை முறைகேடாகப் பயன்படுத்துவது மற்றும் போதைப்பொருளாகப் பயன்படுத்துவதைத் கட்டுப்படுத்துவதற்காக இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கஞ்சாவில் உள்ள ஒரு பிரத்யேக ரசாயனம், மூளையை பாதிக்கக்கூடியது. இது வலி நிவாரணியாக செயல்படுகிறது. முறைப்படி பயன்படுத்தினால், கஞ்சா பல மருத்துவ நன்மைகளைக் கொடுக்கும். 


கஞ்சாவின்ஆரோக்கிய நன்மைகள்:


நாள்பட்ட வலி நிவாரணம். கஞ்சாவில் நூற்றுக்கணக்கான ரசாயன கலவைகள் உள்ளன, இதுபோன்ற வேறு எந்த பொருளிலும் இந்த அளவு ரசாயனங்கள் இருகாது. இந்த பிரத்யேக ரசாயன அமைப்பு காரணமாக நாள்பட்ட வலிக்கு காஞ்சா நிவாரணம் அளிக்கிறது.  


சிகரெட் புகைப்பதைப் போலல்லாமல், கஞ்சா வடிவில் கஞ்சாவைப் புகைக்கும்போது உங்கள் நுரையீரல் பாதிக்கப்படாது. உண்மையில், கஞ்சா நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பதை விட அதன் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.


ALSO READ | அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி


உடலில் இன்சுலினைக் கட்டுப்படுத்த உதவும் கஞ்சாவின் பண்பினால், உடல் பருமனை குறைக்கவும் (Weight Loss), நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. 


கஞ்சாவின் மிகப்பெரிய மருத்துவ நன்மைகளில் ஒன்று புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான குணம் ஆகும். அதிலும் குறிப்பாக சில வகை புற்றுநோய் சிகிச்சைக்கு கஞ்சா சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 


கஞ்சாவில் உள்ள எண்டோகன்னாபினாய்டு கலவைகள் மனச்சோர்வு மற்றும் மன இறுக்கத்தை குறைக்க உதவுகின்றன. உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவு, கன்னாபிடியோல் என்ற ரசாயனம் கஞ்சாவில் இருக்கிறது.  


READ ALSO | 2 வாரங்களில் எடையை 6 கிலோ குறைக்க சூப்பர் Clamps Device


கண் பார்வையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் கிளௌகோமா பிரச்சனைக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கிறது.  ஹெபடைடிஸ் சி உடன் தொடர்புடைய பக்க விளைவுகளை குறைக்கிறது மற்றும் சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கிறது.


பொதுவாக, ஹெபடைடிஸ் நோய்க்கான சிகிச்சையானது குமட்டல், சோர்வு, மனச்சோர்வு மற்றும் தசைவலி போன்ற பல பக்க விளைவுகளைக் ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் சி பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை பால மாதங்கள் வரை நீடிக்கும்.


சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளில் மருத்துவ பயன்பாடுகளுக்காக (Medicinal Usage) கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. குடல் அழற்சி நோய்கள் மற்றும் பார்கின்சன் நோய்க்கு தரப்படும் மருந்துகளில் மருந்தாக கஞ்சா சேர்க்கப்படுகிறது.  


(குறிப்பு: கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடுகளை பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்)


ALSO READ | ஆரோக்கியமான விந்தணுவிற்கு உத்தரவாதம் தரும் பழம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR