விந்தணு குறையாமல் இருக்க இந்த உணவுகளை தவிர்க்கவும்
Sperm Count Increase Tips: `அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு` ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சிறந்த உணவுகளை தேர்வு செய்யுங்கள். தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்ப்ப நல்லது.
Sperm Tips: விந்தணு உற்பத்தி ஒரு சிக்கலான செயல்முறையாகும். விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் காரணிகளில் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் மற்ற உறுப்புகளைப் போலவே, ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அமைப்பு சரியாக செயல்பட வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம். ஆரோக்கியமான உணவுகளை உண்பது மட்டுமில்லாமல், சில பொருட்களை அடிக்கடி உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அது அவர்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.
குறைந்த விந்தணு எண்ணிக்கையுடன் போராடும் ஆண்களுக்கு, இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வது மிகச் சிறந்த வழியாகும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்ப்ப நல்லது. விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகமாக புகைபிடிப்பதை தவிர்க்கவும், போதைப்பொருள் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: விந்தணு குறைபாடா? இந்த பழக்கங்கள் காரணமாக இருக்கலாம், ஜாக்கிரதை
விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் உணவுகள்:
டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats)
டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என 2011 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Processed Meats)
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதே ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை
பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (Bisphenol A (BPA)
பூச்சிக்கொல்லிகளை நாம் நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நல்ல விளைச்சல் கொடுக்க பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. அதோடு, பேக்கேஜிங் மற்றும் கேன்களில் உள்ள உணவுகளில் பிபிஏ மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் இரண்டும் ஜீனோஎஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன. Xenoestrogens என்பவை ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படும் இரசாயனம். சோயாவில் உள்ள பைட்டோ எஸ்ட்ரோஜன்களைப் போலவே, ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், காயக்றி, பழங்களை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது பொதுவாக எல்லோருக்குமே நல்லது.
மேலும் படிக்க: சுயஇன்பம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் / தீமைகள்!
சோயா உணவுகள்
சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் (Phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாஸ்டனில் உள்ள விந்தணு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் 99 ஆண்களின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள்
அதிக கொழுப்பு பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதும் விந்தணுக்களை குறைக்கும். Rochester Young Men நடத்திய ஆய்வில், 18-22 வயதுக்குட்பட்ட 189 ஆண்கள் மீது விந்துணவுக்களின் அளவு மற்றும் உணவிற்கு இடையிலான தொடர்பு பற்றி பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் (கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ்) ஆகியவை காரணமாக விந்தணு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க: Testosterone: ஆண்மையை பாதிக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைபாடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR