இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களினால் பாலியல் பிரச்சனைகளால் பலர் சிக்கலகளை சந்திப்பதை பார்க்க முடிகிறது.  இதனை சமாளிக்க ஏராளமான மக்கள் வயாக்ராவையும் நாடுகிறார்கள். இது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க மாதுளையின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். தினமும் மாதுளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கலாம். ஆனால், நீங்கள் மாதுளையை எப்போது, ​​எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். எனவே மாதுளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம், அதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


இரவில் ஒரு கிண்ணம் மாதுளை 


ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது . இது கருவுறுதல் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதாவது, உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்


இஞ்சியும் சிறந்த தீர்வாகும்


இது தவிர இஞ்சியையும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகள் தீரும். உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. உங்கள் உடலில் பாலுணர்வை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அவசியமான ஹார்மோன் ஆகும். இது தவிர, பச்சை வெங்காயமும் உங்களுக்கு நன்மை பயக்கும். இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த விஷயங்களைச் சேர்த்த பிறகு, நீங்கள் வயாக்ராவை மறந்துவிடுவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR