வசீகரிக்கும் உடல் மிடுக்கைப் பெற ஆண்களுக்கான டிப்ஸ்
ஆண்கள் மிடுக்கான மற்றும் வசீகரிக்கும் உடல் அழகைப் பெற வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
Mens Health Tips: ஃபிட்னஸூடன் இருக்க வேண்டும் என விரும்பும் ஆண்கள் அதிகம். ஆனால், அதற்காக நாம் எண்ணத்தில் மட்டும் தயாராக இருந்தால் போதாது, உடல் அளவில் பயிற்சிகளை மேற்கொள்ளவும் ரெடியாக இருக்க வேண்டும். ஜிம்முக்கு சென்றால் கட்டாயம் உங்கள் உடல் அழகு மெருகேறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஜிம்முக்கு சென்றால் தான் உடல் மெருகேறுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
ஹோட்டலில் தான் உணவு சாப்பிட முடிவதைப்போல, அந்தந்த இடங்களுக்கு சென்று பயிற்சி எடுக்கும்போது உடலும் மனதும் மிகவும் மகிழ்ச்சியாக, புத்துணர்ச்சியாக இருக்கும். விரைவாக உங்களின் உடல் அழகையும் பெறுவீர்கள். அதேநேரத்தில் எந்தெந்த விஷயங்களில் நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | தண்ணீர் அதிகம் குடிக்கிறீர்களா... கவனம் தேவை
உணவுமுறை
உடற்தகுதிக்கு, உணவில் கவனம் செலுத்துவது அவசியம். இதற்கு உடற்பயிற்சிக்கும் உணவுக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்த வேண்டும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து அன்றாட டையட்டில் சேர்த்து நீங்கள் சாப்பிட வேண்டும். இதனால் நீங்கள் முழுமையான ஊட்டச்சத்து பெறும் உங்கள் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த பால் பொருட்களையும் தவிர்த்தல் நல்லது. பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி ஒரு மனிதனை பல நோய்களில் இருந்து விலக்கி வைக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய நோய் மற்றும் பல நோய்களைத் தவிர்க்கலாம். இதனுடன், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
மன அமைதி
நீங்கள் உங்களை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வைத்திருக்க விரும்பினால் எப்போதும் மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க, நீங்கள் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யலாம். அல்லது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தமின்றி இருக்க முடியும். அதிகமான உடல் செயல்பாடுகள் மூலம் மனநிலை நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | Kitchen Hacks: கசப்பான வெள்ளரிக்காயை எப்படி சரி செய்வது, எளிய டிப்ஸ் இதோ
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR