Health Tips for Women: ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி மற்றும் உடல் சோர்வும் ஏற்படுகிறது. மாதம் ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு, வாந்தி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்னைகள் வரும். இந்த காலத்தில் கண்டிப்பா ஓய்வு மிக முக்கியம். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஓய்வு எடுக்க நேரம் இல்லையென்றாலும், அட்லீஸ்ட் சில உணவு வகைகளை (What foods to eat during your cycle)  கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதேநேரத்தில் சில உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்:
ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்பு வகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி, வைட்டமின் சி சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம்.


தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்:
பீரியட் காலத்தில் ரத்தபோக்கு ஏற்படுவதால், நீர் ஆதாரம் உடம்புக்கு தேவை. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் நார்சத்து நிறைந்த பழச்சாறு கூட குடிக்கலாம். வைட்டமின் பி6  நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது. 


ALSO READ |  தள்ளிப்போகும் மாதவிடாய் பிரச்சனை... எதனால் ஏற்படுகிறது?


இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்: 
பீட்சா, பர்கர், சிப்ஸ், குளிர் பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட ஜங்க் உணவுகள், எண்ணையில் பொறித்த உணவுகள் போன்றவற்றை குறைந்தது ஐந்து நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாதவிலக்குக் காலத்தில், காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 


மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்:
மாதந்தோறும் வலி அதிகரித்துக்கொண்டே சென்றால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் பிரச்னையாகவும் இருக்கலாம். உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வலிக்கான மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகும் கூட வலி தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். 


ALSO READ |  மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘மென்சுரல் கப்’ பற்றி தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR