வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள்: பல நேரங்களில் உடலில் சோர்வு மற்றும் சோம்பல் அதிகமாக இருக்கும். இதனால் வேலை செய்ய மனமிருக்காது. உடலில் எப்போதும் சோர்வும், பலவீனமும் இருக்கும். மறுபுறம், மெட்டபாலிசம் பலவீனமாக இருப்பதால், பல நேரங்களில் உணவு சரியாக ஜீரணமாகாமல், உடலுக்கு சக்தி கூட கிடைக்காது. மேலும், மெட்டாபாலிஸம் சரியாக இல்லை என்றால் உடல் எடையும் அதிகரிக்கும். மறுபுறம், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, எடையையும் குறைக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் உணவுகள்:


இஞ்சி 


இஞ்சி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், உடல் வலியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர இதனை தினமும் உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது, வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


பச்சை காய்கறிகள்


பச்சைக் காய்கறிகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அவற்றை உண்பதால், வளர்சிதை மாற்றம் வலுவடைவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். பச்சைக் காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் பச்சைக் காய்கறிகளில் காணப்படுகின்றன. எனவே, அவற்றை உட்கொள்வதன் மூலம், பலவித நோய்கள் உங்களை அண்டாமல் இருக்கும்.


காபி 
காபி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். காபி குடிப்பதால் உடலில் உள்ள சோம்பல் மற்றும் சோர்வு நீங்கும். அதுமட்டுமின்றி, காபி குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை வலுப்படுத்த உதவுகிறது.


தேங்காய் எண்ணெய்


தேங்காய் எண்ணெய் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் பருமன் குறைகிறது. ஆம், தேங்காய் எண்ணெயில் காணப்படும் சத்துக்கள் அல்சைமர் போன்ற கடுமையான நோய்களையும் விரட்டும் .


மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ