லேசான இருமல் கூட நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்
புற்றுநோய் என்பது ஒரு கொடிய நோய். இந்த நோய் தீவிரமானது, ஏனெனில் அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை. வழக்கமான உடல் பரிசோதனை வழியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் தப்பிக்கலாம்.
பொதுவாக புற்றுநோய் உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். மற்ற நோய்களைப் போலவே வருவதற்கு முன்னரே, உடலில் அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது அவசியம். சில நேரங்களில் நோய் கடுமையான அறிகுறிகளை காட்டும், சில நேரங்களில் சாதாரணமான அறிகுறிகள் மட்டுமே தென்படும். அது குறித்து உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
லேசான இருமல் கூட அறிகுறி
மிக லேசான அறிகுறிகள் கூட புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும். பெண் ஒருவருக்கு லேசான இருமல் மட்டுமே இருந்துள்ளது. அதற்காக அவர் மருந்துகள் எடுத்தும் சரியாகததால், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்து அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். அதனால், உடல் காட்டும் அறிகுறிகளைப் பொறுத்தவரை எப்போதும் புறக்கணிக்கக்கூடாது.
நுரையீரல் புற்றுநோய்
இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது உள்ளிட்ட எந்த பழக்கமும் இருந்திருக்கவில்லை. நுரையீரல் புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 2 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், நாள்பட்ட இருமல் போன்ற சில அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகுவது நல்லது. இருமும் போது ரத்தம் சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, மூச்சுத்திணறல், கரகரப்பு, விவரிக்க முடியாத எடை இழப்பு, எலும்பு / மூட்டு வலி, சோர்வு, தலைவலி, முகம் அல்லது கைகளில் வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்
நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோயில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் நோயின் பிறழ்வுகள் மற்றும் அவற்றின் பாதைகளை அடையாளம் கண்டு, பாதையை குறிவைப்பதன் மூலம் நோய்ப் பரவலை தடுக்க முடியும். அதன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு சில- நுரையீரலில் கண்டறியப்பட்ட பொதுவான மரபணு மாற்றங்கள் புற்றுநோய் EGFR, KRAS மற்றும் ALK மரபணுக்களில் உள்ளது. EGFR புரதத்தின் பிறழ்ந்த வடிவங்களை இலக்காகக் கொண்ட சிகிச்சை முறைகள் கூட மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ