உடல் கொழுப்பை கரைக்கவும், தொப்பையை கரைக்கவும், வலுவான தசைகள் தேவை. இது அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதிக புரதம் சாப்பிடுவதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், தசை வலுவாகிறது. எனவே, தசையை வலுவாக்கவும், உடல் எடையை குறைக்கவும், அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை தசை மற்றும் திசுக்களை உருவாக்கி உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கான சிறந்த காலை உணவுகள்


அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவு எடை இழப்புக்கான சிறந்த உணவாக  (Weight Loss Tips) கருதப்படுகிறது. அதிக புரோட்டீன் காலை உணவுடன், வழக்கமான உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் அந்த நாளில்,  நாம் எந்த எந்த அளவிற்கு ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதை தீர்மானிக்கிறது. காலை உணவு மிகவும் ஹெவியாக இருந்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கு பதிலாக, உடல் சோம்பலாக உணர ஆரம்பிக்கும். அதே நேரத்தில், காலை உணவு மிகவும் லைட்டானதாக இருந்தால், சிறிது நேரத்திலேயே பசி ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காலையில் உண்ணும் உணவு, ​​வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை கொடுப்பதாகவும், உடல் இளைக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும்.


சிறுதானியங்கள் சேர்த்த இட்லி அல்லது தோசை


காலை உணவாக இட்லி அல்லது தோசை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். அதிலும் அரிசியுடன் சிறுதானியங்களையும் சேர்த்து செய்யும் இட்லி அல்லது தோசை உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது தவிர, இது ப்ரோபயோடிக் உணவு என்பதால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!


முட்டை உணவுகள்


காலை உணவில் புரதம் நிறைந்த முட்டையை சேர்க்கலாம். எடையைக் குறைக்க முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முட்டையிலிருந்து உடலுக்கு நல்ல அளவு புரதம் கிடைக்கிறது. இதனல் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கும்.


பாசிப்பருப்பு தோசை


பாசிப்பருப்பு தோசை புரதம் நிறைந்துள்ளது. அதிலும் முளை கட்டிய பாசிப் பருப்பு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. பாசிப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து, அதில் பொடியாக நறுக்கிய காயகறிகளை சேர்த்து தேசை செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும். 


முளை கட்டிய பயறுகள்


முளை கட்டிய பயறுகள் கொண்ட சாலட் உடல் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த சாலட் தயாரிக்க முளை கட்டிய பயறுகள், காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை தேவை. முளை கட்டிய பயறுகளை சாப்பிடுவதன் மூலம், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, வாய்வு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் விலகும்.


அவல் உப்புமா


காலையில் ஒரு கப் கிண்ணம் காய்கறிகள் சேர்த்து செய்த அவல் உப்புமா சாப்பிட்டால் வயிறு நிரம்புவது மட்டுமின்றி கொழுப்பு கரையும். அதிலும் சிவப்பு அவல் மிகவும் சிறந்தது. உப்புமா செய்யும் போது, ​​அதில் நிறைய காய்கறிகளைச் சேர்க்கவும். அதோடு வேர்க்கடலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ