Health Benefits of Coconut Water: கோடை காலத்தில், நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிக அவசியமாகும். இதற்கு பல வித பானங்களை நாம் உட்கொள்கிறோம். ஆனால், கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் இளநீருக்கு இணையே கிடையாது என்றே கூறலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு இயற்கையான பானம். பதப்படுத்தப்படாமல், எந்த வித கூடுதல் சுவைகளும் ஏற்றப்படாமல் இயற்கையான வழியில் உடனடி ஆற்றலை பெற இது உதவுகிறது.
கோடையில் பலர் தங்களை நீரேற்றமாக வைத்திருக்க இளநீரை உட்கொள்கிறார்கள். ஆனால் இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இளநீரில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக இதை உட்கொள்வது பல வகையான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோர்வு
களைப்பை நீக்கி உடனடி ஆற்றலை அளிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இளநீரில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. மேலும் இது ஒரு குறைந்த கலோரி பானமாகும். தினமும் காலையில் இளநீர் குடிப்பது சோர்வு மற்றும் பலவீனத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
மன அழுத்தம்
இன்றைய பிஸியான வாழ்க்கையில் மன அழுத்தம் மிகவும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. தினமும் இளநீர் உட்கொண்டால் அது மன அழுத்தத்தைப் போக்க உதவும் என்று கூறினால் பலர் ஆச்சரியப்படக்கூடும். ஆனால், அது உண்மை. இளநீர் மன அழுத்தத்தை நீக்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | கோடை வெயிலுக்கு கரும்புச் சாறு ஏன் அவ்வளவு நல்லது...? கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
எடை இழப்பு
இளநீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் இளநீர் உட்கொள்வதால், உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி, வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது எடை இழப்பில் பெரிய வகையில் உதவுகிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இளநீர் குடிப்பது நன்மை பயக்கும். இன்சுலின் பற்றாக்குறை நீரிழிவு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இளநீர் இன்சுலின் அதிகரிக்க உதவி இரத்த சர்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
தூக்க கலக்கத்தை தீர்க்கும்
மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தலைவலிக்கும், தூக்க கலக்கமாக இருக்கும். இதனை தவிர்க்க, காலையில் இளநீர் குடிக்கலாம். இதனால் தூக்க கலக்கம் நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ