மழை கால நோய்களும்... அதனை தடுக்கும் வழிமுறைகளும்..!!!
மழைகாலம் தொடங்கியதால், மக்கள் கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மழை வெயிலில் இருந்து நிவாரணம் கொடுத்தாலும், இந்த பருவத்தில் நோய்களும் கூடவே வருகிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மழைகாலம் தொடங்கியதால், மக்கள் கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். வானிலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் மாறியுள்ளது. மழை வெயிலில் இருந்து நிவாரணம் கொடுத்தாலும், இந்த பருவத்தில் நோய்களும் கூடவே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மழையின் போது நீர் தேங்குவதால், பல பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்து ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். மழைக்காலத்தில் இந்த நோய்களின் ஆபத்து மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம்.
மழையில் கீழ்கண்ட நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது
வைரஸ் காய்ச்சல்
மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் வருவது சகஜம். இதன் காரணமாக, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, சோர்வு மற்றும் உடல்வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, மழையில் நனைவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். சுத்தமான தண்ணீரை அருந்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகளை (Health Tips) உட்கொள்ளவும்.
டைபாய்டு
மழைகாலத்திலும், பருவ நிலை மாற்றத்தில் டைபாய்டு நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது அழுக்கு நீர் மற்றும் அசுத்தமான உணவுகளால் ஏற்படலாம். இதனால் அதிக காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி மற்றும் பலவீனத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, சந்தையில் திறந்த வெளியில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
மலேரியா
அனாபிலிஸ் என்ற பெண் கொசு கடிப்பதால் மலேரியா ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் மழையின் போது வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன, எனவே மலேரியா காய்ச்சல், மழை காலத்தில் பலரையும் தாக்கக் கூடியது. இதை தவிர்க்க, கொசு கடியை தவிர்க்க வேண்டும். கொசுவலை, க்ரீம், ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டைச் சுற்றிலும் தூய்மையைப் பராமரிக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!
டெங்கு
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்டி கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தசைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். இதை தவிர்க்க, கொசு கடியை தவிர்க்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தூய்மையைப் பராமரிக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு மருந்துகளை மிதமான அளவில் பயன்படுத்தலாம்.
இருமல் மற்றும் சளி
மழையில் நனைந்தால் தும்மல், சளி, தொண்டையில் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இதிலிருந்து நிவாரணம் பெற இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ