காலையில் படுத்தும் மலச்சிக்கலை சட்டென சரி செய்ய சூப்பரான 4 டிப்ஸ்
Morning Habits To Get Rid of Constipation: மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் உட்கொள்ளும் நீரின் அளவு, நமது உணவுப்பழக்கங்கள், உடல் செயல்பாடுகள், வாழ்க்கை முறை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
Morning Habits To Get Rid of Constipation: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக மலச்சிக்கல் ஒரு பரவலான நோயாக மாறி வருகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் பலரிடம் காணப்படுகின்றது. இது பலரிடம் காணப்படுவதால் இன்றைய காலத்தில் மலச்சிக்கலை மக்கள் ஒரு பொதுவான நோயாக பார்க்கத் தொடங்கி விட்டார்கள். உங்கள் வயிற்றில் வாயு உருவாக ஆரம்பித்து வயிற்று வலி அதிகரிக்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சனை ஆண், பெண் பாகுபாடும் வயது வித்தியாசமும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் உட்கொள்ளும் நீரின் அளவு, நமது உணவுப்பழக்கங்கள், உடல் செயல்பாடுகள், வாழ்க்கை முறை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யலாம். தினமும் காலையில் சில பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
மலச்சிக்கலில் நிவாணம் அளிக்கும் காலை பழக்கங்கள்:
1. உடல் நீரேற்றத்துடன் இருப்பது அவசியம்
நீரிழப்பு உடலில் மலச்சிக்கலை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால், கண்டிப்பாக காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாதவர்களும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை வருவதை தடுக்கலாம். காலையில் எழுந்தவுடன் தண்னீர் குடிப்பது மலத்தை மென்மையாக்கவும், குடல் இயக்கங்களை எளிதாக்கவும் உதவும். இது தவிர, அஜீரணத்தைத் தடுக்க, காலையில் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்குப் பதிலாக ஃப்ரெஷ் பழச்சாறுகளைக் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.
2. உடற்பயிற்சி
உடல் செயலற்ற நிலையில் இருப்பது மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும். காலை வேளைகளில் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங், யோகாசனம் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் தினமும் செய்யலாம். இது செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
3. வயிற்று மசாஜ்
வயிற்று மசாஜ் மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் மலச்சிக்கல் இருப்பது போலவும், மலம் கழிப்பதில் பிரச்சனை இருப்பது போலவும் உணர்ந்தால், வயிற்றில் சிறிது அழுத்தம் கொடுத்து க்ளாக்வைசில் மசாஜ் செய்யலாம். இது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும்.
4. புரோபயாடிக்குகளை சாப்பிடுங்கள்
புரோபயாடிக்குகள் உங்கள் குடலில் இயற்கையாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள். நாள்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். புரோபயாடிக்குகள் நாம் பொதுவாக உட்கொள்ளும், தயிர், சீஸ், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளில் காணப்படுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ