தாயின் மனசோர்வு, உடல் நல குறைவு ஆகியன குழந்தையின் இதயதுடிப்பினை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாயாரின் உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற கோளாறுகள் அவர்களது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்கும் என வாஷிங்டன்னில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.


மனித உடலின் 24 மணிநேர செயல்பாடுகள் குறித்து வாஷிங்டன்னை சேர்ந்த உடலியல் துறை பல்கலை கழகம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் மனித கூறுகளின் முக்கியதுவம், செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கூர்ந்து ஆராயப்பட்டுள்ளது.


குறிப்பாக மனித உடல்கள் இரவு நேரங்களில் எதனை ஏற்றுக்கொள்ளும், பகல் நேரங்களில் எதனை ஏற்றுக்கொள்ளும் என பல விதங்களில் ஆய்வினை மேற்கொண்டுள்ளது.


அதே வேலையில் மனித உடலின் தேவைகளை அறிந்து அவற்றிர்கான தேவைகளை பூர்த்தி செய்ய என்ன வேண்டும் என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த ஆய்வினை மோற்கொண்ட அலினா சுமோவா இதுகுறித்து தெரிவிக்கையில்... இந்த ஆய்வின் முடிவானது, மனிதரின் மனரீதியான மாற்றங்களே உடற்கூரின் மாற்றங்களை தீர்மாணிக்கின்றன. தங்கள் உடலின் மீது இருக்கும் கவனம் மட்டுமல்லாமால் தங்கள் பிரியமானவர்களின் உடல்களின் மீது இருக்கும் கவனமும் தங்கள் மன அழுத்தத்தினை தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குழந்தைகளை பொருத்தவரை தன்னை அறியாமலே தங்கள் தாயுடன் ஒன்றிவிட்ட பிஞ்சுகள் தாயின் உடல் ரீதியான மற்றங்கள், மன ரீதியான மாற்றங்களால் தங்களின் மனதளவில் சோர்வடைகின்றன,. இதன் வெளிப்பாடாகவே குழந்தைகளின் இதயதுடிப்பில் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.