Custard Apple Health Benefits In Winter: சீதாப்பழம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் மக்கள் இதனை அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தை வைத்திருக்க மாட்டார்கள். இவை தற்போதெல்லாம் சந்தைகளில், சூப்பர் மார்க்கெட்களில், பழக்கடைகளில் எளிமையாக கிடைக்கிறது என்பதால் இதன் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வது அவசியமாகிறது. உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த சீதாப்பழம் பெரும் நன்மையை அளிக்கக்கூடிய ஒன்றாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழத்தை நீங்கள் குளிர்காலத்தில் நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம். இதன் இனிப்பான சுவை சாப்பிடுவதற்கும் உகந்ததாக இருக்கும். வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இந்த சீதாப்பழத்தில் நிறைந்திருக்கின்றன. இது உங்களுக்கு ஆற்றலை வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்கும். இதனாலேயே நீங்கள் சீதாப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும், தலைமுடி ஆரோக்கியத்திற்கு சீதாப்பழம், 


ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் சீதாப்பழம்


இதில் இயற்கையாக இனிப்பு சுவையை வழங்கும் ஃப்ரக்டோஸ், குளூகோஸ் ஆகிய மூலக்கூறுகள் உள்ளன. இவை உடலால் எளிதாக உறிஞ்சப்படுபவை. இது உங்களுக்கு நாள் முழுக்க நிலைத்த ஆற்றலை வழங்கும்.


ரத்த அழுத்தத்தை சீராக்கும் சீதாப்பழம்


இது ரத்த அழுத்தத்தை சீராக்கும். தொடர்ந்து, ஹைப்பர்டென்ஷன் ஆபத்தை குறைக்கும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, குளிர்காலத்தில் நிச்சயம் சாப்பிடலாம்.


மேலும் படிக்க | குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..


நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் சீதாப்பழம்


இதில் வைட்டமிண் C அதிகமாக இருக்கிறது. எனவே நீங்கள் குளிர்காலத்தில் அதிகமாக சாப்பிடும்போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளை ரத்த செல்களை அதிகரிக்கச் செய்வதில் வைட்டமிண் C முக்கிய பங்கு வகிக்கிறது. 


உடல் எடை அதிகரிக்காது


சீதாப்பழம் குறைந்த கலோரி பழமாகும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தால் சீதாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறும் நிறைந்த உணர்வை எட்டும். இதன்மூலம் நீங்கள் துரித உணவுகளையும், நொறுக்குத் தீனிதகளையும் பசியற்ற நேரத்தில் கொறிக்கும் பழக்கத்தை கைவிடுவீர்கள். 


செரிமானத்தை சீராக்கும் சீதாப்பழம்


இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் ஒட்டுமொத்தமாக குடல் இயக்கம், செரிமானம் இயக்கத்திற்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிமையாக்கும் நிலையில் உப்புசமோ மலச்சிக்கலோ அல்லது வேறு செரிமானப் பிரச்னைகளோ வராது எனலாம். 


தலைமுடி ஆரோக்கியத்திற்கு சீதாப்பழம்


தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சீதாப்பழமும் கைக்கொடுக்கும். வைட்டமிண் C இதில் இருப்பதால் கொலஜென் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இது சருமத்திற்கு ஈரப்பதமும் அளிக்கும், மென்மையானதாகவும் மாற்றும். 


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | அசைவ உணவுகளுக்கு இணையான புரத சத்து உள்ள மசூர் பருப்பு... வியக்க வைக்கும் நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ