சிறுநீரக கற்கள் பற்றி பரவும் வதந்திகள்.. உண்மை தெரியாவிட்டால் ஆபத்து
Kidney Stone: சிறுநீரக கற்கள் பற்றி பல கட்டுக்கதைகளும் பரப்பப்படுகின்றன. இவை குழப்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நிலைமையை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றும்.
Kidney Stone: சிறுநீரகங்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் உடல் திரவங்களின் சமநிலையையும் இது பராமரிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கெட்ட பொருட்களை சிறுநீரின் மூலம் அகற்றி, பல நோய்களின் அபாயத்தை தானாகவே குறைக்கின்றன. ஆனால் சில நேரங்களில், தாதுக்களின் குவிப்பு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணம் ஆகின்றது. இது சிறுநீரக கல் (Kidney Stone) என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்கள் உருவாகும் நபருக்கு கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் ஆகியவை அதிகரிக்கின்றன.
சிறுநீரக கற்கள்: வழக்கமாக பரப்பப்படும் வதந்திகள் (Myths About Kidney Stone)
சிறுநீரக கற்கள் உருவாக காரணம் என்ன? இது மிகவும் ஆபத்தானதா? சிறுநீரக கற்கள் உருவானால் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? இப்படி பல கேள்விகள் நமக்கு இருக்கும். இதைப் பற்றி பல கட்டுக்கதைகளும் பரப்பப்படுகின்றன. இவை குழப்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நிலைமையை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றும். சிறுநீரக கற்கள் தொடர்பாக வழக்கமாக பரப்பப்படும் வதந்திகள் பற்றியும் அவை தொடர்பான உண்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரக கற்கள்: வதந்திகள் மற்றும் உண்மைகள் (Myths and Facts about Kidney Stones)
கட்டுக்கதை: சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை இல்லை
உண்மை: சிறுநீரக கற்கள் உருவானவுடன் மீண்டும் வரலாம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆபத்தை குறைக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
கட்டுக்கதை: பீர் குடிப்பது சிறுநீரக கற்களை நீக்குகிறது.
உண்மை: இது ஒரு ஆபத்தான வதந்தியாகும். பீரில் உள்ள ஆல்கஹால் உண்மையில் சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். கூடுதலாக, பீர் சிறுநீரில் கால்சியம் அளவை அதிகரிக்கலாம், இது கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆகையால் பீர் குடிப்பது சிறுநீரக கற்களை நீக்குகிறது என்பது உண்மைக்கு முற்றிலும் புரம்பான ஒரு கட்டுக்கதை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | பலவீனமான எலும்புகள் இரும்பு போல் வலுவடைய இதை மட்டும் செய்யுங்கள்
கட்டுக்கதை: சிறுநீரக கற்கள் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும்.
உண்மை: சிறுநீரக கற்கள் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் என்றாலும், பெண்களும் இதற்கு ஆளாவதுண்டு. சொல்லப்போனால், பெண்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
கட்டுக்கதை: சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்.
உண்மை: பெரும்பாலான சிறுநீரக கற்கள் சிறி அளவில் இருக்கின்றன. இவை சில வாரங்களிலேயே இயற்கையாகவே உடலில் இருந்து வெளியேறி விடுகின்றன. வலியைக் குறைக்கவும், கற்களை வெளியே எடுக்கவும் மருத்துவர்களை அணுகி மருந்துகளை பெறலாம். பெரிய அல்லது சிக்கிய கற்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இஞ்சியை ஃபிரிட்ஜ்ல வைக்கக்கூடாது தெரியுமா? உணவை நச்சாக்கும் குளிர்சாதனப் பெட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ