இஞ்சியை ஃபிரிட்ஜ்ல வைக்கக்கூடாது தெரியுமா? உணவை நச்சாக்கும் குளிர்சாதனப் பெட்டி

Refrigerating Food Alert: உணவுகளில் எவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 31, 2024, 02:57 PM IST
  • உணவை குளிர்சாதன பெட்டியில் வைப்பது காரணம் என்ன?
  • உடலாரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் ஃபிரிட்ஜ்
  • உணவுகளின் நச்சுத்தன்மைக்குக் காரணம் என்ன?
இஞ்சியை ஃபிரிட்ஜ்ல வைக்கக்கூடாது தெரியுமா? உணவை நச்சாக்கும் குளிர்சாதனப் பெட்டி title=

குளிர்சாதன பெட்டி பல பொருட்களை சேமித்து வைக்க உதவுகிறது. உணவு மற்றும் காய்கறிகள் உட்பட பால், மாவு என பல்வேறு பொருட்களை வீணாகம்ல் பாதுகாக்க உதவும் ஃபிர்ட்ஜ் இல்லாத வீடுகளே இன்று இல்லை என்றே சொல்லலாம். ஃப்ரிட்

சில உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அவற்றின் பண்புகள் மாறி நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். எனவே எதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்.

பூண்டு
உரித்த பூண்டை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம், ஏனெனில் அது மிக விரைவாக வீணாகிவிடும். உரித்த பூண்டு மட்டுமல்ல, உரிக்காத பூண்டையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் பூண்டு வைத்து பயன்படுத்துவது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல, பூண்டை உரித்த உடனே பயன்படுத்திவிடுங்கள், தோல் உரித்த பூண்டை நீண்ட நேரம் கழித்து பயன்படுத்துவது, அதன் நல்ல குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!

வெங்காயம்

வெங்காயம் குறைந்த வெப்பநிலையைத் தாங்கும் பயிர். அதை ஃபிரிட்ஜில் வைத்தால், மாவுச்சத்து சர்க்கரையாக மாறத் தொடங்குவதுடன், நச்சுத்தன்மை கொண்டதாக மாறத் தொடங்குகிறது. இது சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்துவிதமான வெங்காயங்களுக்கும் பொருந்தும். 

அதேபோல், வெங்காயத்தை வெட்டி வைத்து நீண்ட நேரம் கழித்து பயன்படுத்தக்கூடாது. வெங்காயம், அனைத்து ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களையும் தன்னை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருப்பதால், நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் வைத்து பயன்படுத்துவது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.  

மேலும் படிக்க | Ayurved: உடல் ஃபிட்டா இருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் அஞ்சறைப் பெட்டி பொருட்கள்!

இஞ்சி
குளிர்சாதன பெட்டியில் வைக்கும் இஞ்சியை வைத்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அது விரைவில் வீணாகிவிடும். இதனால் ஆரோக்கியம் கெட்டுப்போய்விடும். இஞ்சியை வெளியில் வைப்பதால் அது காய்ந்தாலும் அதன் குணங்கள் மாறாது. எனவே இஞ்சியை வெளியே வைத்தே பயன்படுத்துங்கள். இஞ்சி காய்ந்தால் தானே சுக்கு என்ற அற்புதமான மூலிகை மசாலா கிடைக்கிறது?

அரிசி
மாவுச்சத்து கொண்ட சாதம்குளிர்சாதன பெட்டியில் வைப்பது மிகவும் தவறாஅனது. உண்மையில், அரிசி சாதம் விரைவில் வீணாகிவிடும் தன்மை கொண்டது. சாதத்தை  24 மணி நேரத்திற்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகரித்துவிடும். அதிலும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சாதத்தை மீண்டும் சூடு படுத்தி உண்டால், அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் 

இவற்றைத் தவிர, வெள்ளரி, உருளைக்கிழங்கு, ஆப்பிள், வாழைப்பழம், வாழைத்தண்டு, பெர்ரிப் பழங்கள் என பல பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது, அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

மேலும் படிக்க | உணவுக்குப் பிறகு சிட்ரஸ் பழங்கள் வேண்டவே வேண்டாம்! மறுத்தால் பிரச்சனை தான்...

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News