தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் பானங்கள்: உடனடியாக வித்தியாசம் தெரியும்
Weight Loss Tips: தினமும் காலையில் சில இயற்கை பானங்களை உட்கொண்டால் தொப்பை குறையும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தொப்பை கொழுப்பை அகற்றி அதன் மூலம் உடல் எடையை குறைக்கும் சில இயற்கை பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Tips: உலகில் சுமார் 2 பில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் தான் பல நோய்களுக்கு அடிப்படை. நம் நாட்டில் உடல் பருமன் பல்வேறு வழிகளில் ஏற்படுகிறது. பணக்கார நாடுகளில் உடல் பருமன் அல்லது கொழுப்பு உடல் முழுவதும் பரவுகிறது, இந்தியாவில் கொழுப்பு பெரும்பாலும் வயிற்றில் மட்டுமே தங்கி விடுகிறது (Belly Fat).
சருமத்தின் கீழ் கொழுப்பு உடல் முழுவதும் பரவினால், அது தோலடி கொழுப்பு (Subcutaneous) என்று அழைக்கப்படுகிறது. இந்த கொழுப்பு அவ்வளவு தீங்கு விளைவிப்பதில்லை, ஏனெனில் இது தோலின் கீழ் ஒரு குஷனாக செயல்படுகிறது. ஆனால் கொழுப்பு வயிற்றை மூட ஆரம்பித்தால், அது உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral fat) என்று அழைக்கப்படுகிறது. உள்ளுறுப்பு கொழுப்பு மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது அதிகரிக்கும் போது, அது வயிற்று குழி, குடல், கணையம், கல்லீரல் மற்றும் இதயத்தை கூட சுற்றி வருகிறது. இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களுக்கு வயிற்றின் அருகே சேரும் கொழுப்பு மறைமுகமாக காரணமாகிறது.
ஆகையால், எப்படியாவது தொப்பை கொழுப்பை அகற்றுவது முக்கியம். இருப்பினும், தொப்பை கொழுப்பை அகற்ற எந்த மந்திர சூத்திரமும் இல்லை. இதற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவை. இதை அகற்ற, வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அவசியம். இதையெல்லாம் சேர்த்து தினமும் காலையில் சில இயற்கை பானங்களை உட்கொண்டால் தொப்பை குறையும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தொப்பை கொழுப்பை அகற்றி அதன் மூலம் உடல் எடையை குறைக்கும் (Weight Loss) சில இயற்கை பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
தொப்பை கொழுப்பை குறைக்கும் இயற்கை பானங்கள் (Natural Drinks to reduce Belly Fat):
கிரீன் டீ:
கிரீன் டீ (Green Tea) நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. கிரீன் டீயில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை தொப்பை கொழுப்பைக் கரைக்க சிறந்ததாகக் கருதப்படுகின்றன. காலையில் க்ரீன் டீயை 12 வாரங்களுக்கு உட்கொள்வதால் எடை மூன்றரை கிலோ குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. க்ரீன் டீ தவிர, பிளாக் டீயும் தொப்பை கொழுப்பை நீக்குவதற்கு நன்மை பயக்கும்.
இஞ்சி டீ:
காய்கறிகள், ரசம், தொக்கு, துவையல் என உணவு வகைகளில் இஞ்சி சேர்த்தால் அவற்றின் சுவை இன்னும் அதிகமாகின்றது. பல வகையான நோய்களுக்கு இஞ்சி (Ginger) கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சளி, இருமல், மூட்டுவலி போன்றவற்றில் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி மூலம் தொப்பையையும் குறைக்கலாம். 2 கிராம் இஞ்சிப் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதால் தொப்பை விரைவில் குறையும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சியை நசுக்கி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, தினமும் காலையில் குடிக்கவும். சில மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
மேலும் படிக்க | Thyroid: பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வந்தால் அதை காட்டும் அறிகுறிகள் யாவை?
எலுமிச்சை-தேன்:
தொப்பையை நீக்க, முதலில் தினமும் காலையில் எழுந்ததும், தண்ணீரை சூடாக்கி, அதில் எலுமிச்சை (Lemon) மற்றும் தேன் சேர்க்கவும். சில மாதங்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள். எலுமிச்சை வைட்டமின் சியின் சிறந்த மூலமாகும். இதனுடன், பெக்டின் ஃபைபர் இதில் உள்ளது. இது கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. மறுபுறம், தேனில் பல வகையான ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் உட்பட பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சோம்பு தண்ணீர்:
உணவு உண்ட பிறகு பெரும்பாலும் பலர் சோம்பு உட்க்கொள்கிறார்கள். ஏனெனில், சோம்பு (Fennel) செரிமான சக்தியை வலுப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. கொழுப்பை எரிப்பதில் பெயர் பெற்ற சோம்பில் பல வகையான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. சோம்பை இரவு ழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சிறிது சூடாக்கி காலையில் குடிக்கவும்.
காய்கறி சாறு:
பொதுவாக பழச்சாறு எடையை அதிகரிக்கும் என்றும் காய்கறி சாறு (Vegetable Juice) எடையைக் குறைக்கும் என்றும் கூறப்படுகின்றது. குறைந்த சோடியம் காய்கறி சாறு விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், கலோரிகள் குறைவாக உள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், காலிஃபிளவர், பசலைக்கீரை, பாகற்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் பலன் தரும். இவை அனைத்தையும் தவிர, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கோவிட் நோய் பலி எண்ணிக்கை 5,33,327! பீதியைக் கிளப்பும் கொரோனாவின் புதிய அவதாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ