மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!
Home Remedies For Regular Periods : பெண்கள் பலர், மாதவிடாய் கோளாறு காரணமாக அவதிப்படுவர். இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
Home Remedies For Regular Periods : மகளிர் பலருக்கு வயது வந்த காலத்திற்கு பிறகு அதிகம் வரும் பிரச்சனைகளுள் ஒன்று, மாதவிடாய் கோளாறு. வாழ்வியல் சூழல்கள், உடல் எடை அதிகரிப்பு, உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். இது மட்டுமன்றி, பிசிஓஎஸ், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம். இதை தவிர்த்து, மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற மனநலன் சார்ந்த பிரச்சனைகளும் இதில் அடங்கியிருக்கின்றன. மாதவிடாய் சரிசெய்ய பல்வேறு இயற்கை வைத்தியங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டாலும், ஒரு சில வைத்தியங்கள் மட்டுமே உண்மையாக பயணளிப்பவையாக உள்ளன. அப்படி மகளிருக்கு உதவும் சில வீட்டு வைத்தியங்களை இங்கு பார்ப்போம்.
சீரகம்:
சீரகம், மாதவிடாய் கோளாறினை நீக்கும் இயற்கை மருந்துகளுள் ஒன்று. இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
சீரக தண்ணீர்:
சீரகத்தையும் வெள்ளத்தையும் தண்ணீரில் கலந்து குடிப்பது மாதவிடாயை இயற்கையாக வரவழைக்க உதவும்.
ஓமம்:
ஓமத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால், மாதவிடாய் சரியான நேரத்தில் வருவது மட்டுமன்றி மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலியையும் கட்டுப்படுத்தலாம்.
ஓமத்தண்ணீர்:
ஒரு டம்ளர் தண்ணீரில் ஓமத்தை சேர்த்து அதனுடன் நுணுக்கிய வெள்ளத்தை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும்.
பப்பாளி பழம்:
மாதவிடாய் கோளாறு சரியாக, கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பலர் பப்பாளி பழத்தை பரிந்துரைப்பர். இதில் உள்ள கெரோடின் சத்து, மாதவிடாய் வருவதற்கான ஹார்மோன்களை தூண்டி, சரியான சமயத்தில் மாதவிடாயை வரச்செய்யும்.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பை கரைய வேண்டுமா... இந்த ‘சூப்பர்’ யோகாசனங்கள் உதவும்!
எப்படி சாப்பிடுவது?
பப்பாளி பழத்தை தோல் நீக்கி அப்படியே சாப்பிடலாம். அப்படி இல்லையென்றால் நாளுக்கு இரு முறை பப்பாளி ஜூஸ் குடிக்கலாம். ஒரு கப் பப்பாளி அல்லது ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ் சரியான நேரத்தில் மாதவிடாயை வரவழைக்க உதவும்.
இஞ்சி:
இஞ்சியில், இயற்கையாக மாதவிடாயை வரவழைக்க உதவும். ஆனால், இதை சாப்பிடுவதால் வயிற்றில் அசிடிட்டி கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது, கர்ப்பப்பை சூட்டையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும்?
இஞ்சியை டீயில் கலந்து குடிக்கலாம். அல்லது வெறுமென இருக்கும் இஞ்சியை கொஞ்சம் நசுக்கி, தேன் கலந்தும் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் இஞ்சி சாறு குடித்தால் சாறினை குடிப்பதால் சரியான நேரத்திற்கு மாதவிடாயை வரவழைக்கலாம்.
கேரட்:
அதிக கெரோடின் நிறைந்த உணவு பொருட்களுள், கேரட்டும் ஒன்று. இதை தனியாக அப்படியே சாப்பிடலாம். அல்லது ஒரு நாளில் மூன்று வேலை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம்.
மஞ்சள்:
தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை குறைஞ்சு தட்டையான வயிறு வேணுமா? அப்ப இந்த 5 யோகா ஆசனத்தை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ