ஒரே மாதத்தில் தொப்பை கரைய வேண்டுமா... இந்த ‘சூப்பர்’ யோகாசனங்கள் உதவும்!

இன்றைய காலகட்டத்தில், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு நமது மோசமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கமுமே காரணம். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும். 

பணத்தை நோக்கி ஓடி கொண்டிருக்கும் நாம், மிக முக்கிய விஷயமான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாமல், நேரம் கிடைக்கும் போது சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதில் ஒன்று தான் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் பருமன்.

1 /7

சில எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும், மிக விரைவாக எளிதாக கரைக்கலாம். ஒரு மாதத்திலேயே பலனை கண்கூடாக பார்க்கலாம். உடல் பருமன் மற்றும் கொழுப்பை கரைக்கும் திறன் பெற்ற பிரத்யேக யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் சிக்கென்ற உடல் வாகை பெறலாம்.

2 /7

பாலாசனம் தொப்பையை கரைத்து தசைகளை பலப்படுத்தும் சிறந்த ஆசனம் ஆகும். முழு உடலும் குதிகாலின் மீது இருக்கும் படி முழங்காலை வளைத்து தரையில் உட்கார்ந்து கொண்டு உங்கள் நெற்றியினால் தரையை தொட முயற்சிக்க வேண்டும்.

3 /7

பிளாங்க் அல்லது கும்பகாசனம் என்பது மிகவும் பிரபலமான தொப்பையை கரைக்கும் யோகா பயிற்சி. பானை போல் வயிறு இருப்பவர்கள் தினமும் பிளாங்க் பயிற்சி செய்வ்வதால, வியக்கத்தக்க பலன்களை அடையலாம்

4 /7

புஜங்காசனம்: தொப்பை, இடுப்பு மற்றும் வயிற்றின் தசைகளை வலுப்படுத்தி உடல் கொழுப்பை கரைக்கும் புஜங்காசனத்தை செய்ய குப்புறப் படுத்துக்கொண்டு பாம்பு படம் எடுப்பது போல் உடலை வளைந்து நிமிர்ந்து செய்ய வேண்டும். புஜங்காசனத்தில் உடல் எடை குறைவதுடன் கூடவே பார்வையும் தெளிவாகிறது.

5 /7

திரிகோணசனம் அல்லது முக்கோண போஸ் இடுப்பின் ஓரங்களில் சேரும் கொழுப்பை விரைவாகக் குறைக்க உதவுகிறது. முக்கோண்ட வடிவில் உடலை வளைத்து உங்கள் கால்களைத் தொட வேண்டும். இந்தப் பயிற்சியால் தொப்பையுடன் கைகளில் படிந்திருக்கும் கொழுப்பையும் குறைக்கலாம்.

6 /7

தனுராசனம் தொப்பையை கரைப்பதோடு, வயிற்று மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ள யோகா பயிற்சி. இதைப் பயிற்சி செய்ய, நீங்கள் தரையில் படுத்துக் கொண்டு செய்ய வேண்டும். வில் போல் வளைத்து செய்யும் இந்த ஆசனத்தை தினமும் 2-5 நிமிடங்கள் செய்யலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.