Two minutes Noodles என்று பிரபலமான மேகி (Maggi) தொடர்பான திடுக்கிடும் செய்தி வெளியாகி அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேகி ஆரோக்கியமான உணவு கிடையாது என்று இதற்கு முன்பும் செய்திகள் வெளிவந்திருந்தது. உலக புகழ் பெற்ற நெஸ்லே (Nestle), தனது உணவு தயாரிப்பு 'ஆரோக்கியமாக இல்லை' என்று ஒப்புக்கொள்கிறது, அதோடு, ஐஸ்கிரீமும் சரியில்லை என்று ஒப்புக் கொள்கிறது!!!


இந்திய சந்தையில் மிகவும் அதிகம் விற்பனையாகும் உணவுப் பொருளான மேகி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால், இந்த முறை மூன்றாவது நபர் யாரும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. நெஸ்லே நிறுவனமே தெரிவித்துள்ள செய்தி இது.


Also Read | Cooking Tips: சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…


தனது 60 சதவீத உணவுப் பொருட்கள், மாகி, பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதை நெஸ்லே ஒப்புக் கொண்டுள்ளது. அவற்றை சாப்பிடுவது அல்லது குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.


தனது தயாரிப்புகளில் ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதன்பிறகு, உத்திகள் மாற்றப்படும் என்றும் கூறுகிறது. இது உடல்நலம் தொடர்பான விஷயம். தயாரிப்பை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நிறுவனம் கூறுகிறது.


நெஸ்லேவின் இந்த அறிக்கை உள் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்று 'பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது நெஸ்லேவின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 37 சதவீதம் 3.5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. இந்த மதிப்பீட்டை ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் (Australia's Health Star Rating System) வழங்கியுள்ளது. தயாரிப்புகளுக்கு 1 முதல் 5 வரை மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன.  


Also Read | அறுகம்புல் ஜூஸ் குடித்தால் ஆயிரம் நன்மை! அதில் சில...


நெஸ்லேவின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. மாகி நூடுல்ஸ் அதன் மிகவும் பெயர் பெற்ற தயாரிப்பு. நெஸ்லேயின் நெஸ்காஃபே (Nescafe) அனைவராலும் விரும்பப்படும் தயாரிப்பு ஆகும், இது இரண்டாவது மிகவும் பிரபலமான பிராண்டாகும். 


நிறுவனத்தின் உள் அறிக்கையின்படி, அதனுடைய 60 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை. சில தயாரிப்புகள் ஒருபோதும் ஆரோக்கியமாக இருந்ததில்லை என்பதால், அவற்றை சரிசெய்ய நெஸ்லே முயற்சி செய்தது. அதன் பிறகும் அவை ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது. 


எனவே, நிறுவனம். உணவு பொருட்கள் தொடர்பான தனது முழு இலாகாவையும் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சீரான உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


ALSO READ |  விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR