நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும்.  மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போல, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சிலவற்றை காலையில் வெறும் வயிற்றிக் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கும். இதனால் வாயு,  நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக காலை நேரத்தில் சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சனைகள் இன்னும் தீவிரமடையும்.


ஆரோக்கியமான வாழ்வுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளை சமமாக கொள்ளும் வகையிலான உணவுப் பழக்கவழக்கம் அவசியமாகும். காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என உணவியல் நிபுணர்கள் (Health Tips) எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


1. தேநீர் மற்றும் காபி


காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை பார்ப்பது அரிது. ஆனால் இந்த பானங்கள் அமிலத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. இவற்றில் உள்ள காஃபின் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பத்தை உண்டாக்கும். இதற்குப் பதிலாக, வெந்நீர் அல்லது லெமன் டீ அல்லது ஏதேனு டீடாக்ஸ் பானத்தை உட்கொள்வது நல்லது என்று கருதப்படுகிறது.


2. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்


சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, ஆனால் அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து வாயு மற்றும் எரிப்பு பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பழங்களை காலை உணவுடன் அல்லது அதற்குப் பிறகு சாப்பிடுவது நல்லது.


மேலும் படிக்க | மூட்டு வலியை போக்கும் பிரியாணி இலை கஷாயம், யூரிக் அமில பிரச்சனையை தீர்க்கும் அருமருந்து


3. யோகர்ட் அல்லது தயிர்


தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலி, அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதிலும் கெட்டித்தயிர் அல்லது யோகர்ட்டை காலை உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். இதில் இருக்கும் நுண்ணுயிர்கள் வயிற்றுக்கு நல்லது என்றாலும், வெறும் வயிற்றில் ஆசிட் நிறைந்திருக்கும் என்பதால் இவை யோகர்ட்டில் உள்ள நுண்ணுயிர்களை சிதைத்துவிடும். எனவே, இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே வேண்டாம். நீங்கள் தயிர் சாப்பிட விரும்பினால், அதை காலை உணவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். 


4. சோடா பானங்கள்


சோடா, சர்க்கரை மற்றும் கார்பனேற்றம் அதிகம் நிறைந்த பானங்களை காலையில் வெறும் சாப்பிடும் போது, அசிடிட்டி, வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியத்தை உருவாக்கும். மேலும், இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை என்பதால், இதனை எந்த வேளையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.


5. பொரித்த மற்றும் காரமான உணவுகள்


காலையில் வெறும் வயிற்றில் காரமான அல்லது வறுத்த உணவை உட்கொள்வது செரிமானத்தை பாதித்து, ஆசிடிட்டியை ஏற்படுத்தும். இந்த விஷயங்கள் செரிமான அமைப்பில் அழுத்தம் மற்றும் அமில உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம்.


நிபுணர்களின் பரிந்துரை
 
மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் காலையில் முதல் உணவு இலகுவாகவும் எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஓட்ஸ், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் வெந்நீர் போன்றவை காலை உணவில் இருப்பது நல்லது. இதனால் வயிற்றுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதோடு, அமிலத்தன்மை பிரச்சனையும் ஏற்படாது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்லீரல் முதல் இதயம் வரை எல்லாம் பக்காவாக இருக்க... பப்பாளி விதையை இப்படி யூஸ் பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ