Health Care Tips: காலை உணவு (Healthy) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கக்கூடியது காலை உணவு என்று எல்லோருக்கும் தெரியும். உடல் எடை குறைக்க கலோரிகள் குறைந்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.  உடல் எடை குறைக்க, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், காலையில் நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் சாப்பிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? துரதிர்ஷ்டவசமாக, வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிட்டால் சில உணவுகள் நமக்கு மிகவும் நல்லதல்ல என்பதை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே காலையில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்


சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, மொசாம்பி போன்ற பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், கிட்டத்தட்ட அனைவரும் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், அவற்றை வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


ALSO READ | Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!


சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் இதில் டானின் மற்றும் பெக்டின் உள்ளது. இதனால் இதை வெறும் வயிற்றை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.


வாழைப்பழம்: வாழைப்பழம் முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன, ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் மெக்னீசியத்தின் அளவு அதிகரிக்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும்.


தக்காளி: தக்காளியில் வைட்டமின் C (Vitamin C) மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தக்காளியில் (Tomato) உள்ள டானிக் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உணவுக்குழாய் மற்றும் புண் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சில சிட்ரஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


காரமான உணவுகள்: வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் உங்களுக்கு வயிற்று எரிச்சல் ஏற்படும். இது அமில எதிர்வினைகள் மற்றும் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும். அவை மிகவும் கூர்மையான மற்றும் வலுவான சுவை கொண்டவை, இது அஜீரணத்தைத் தூண்டும். பூண்டு, சூடான மிளகாய், இஞ்சி ஆகியவை காரமான உணவுகளுக்கு எடுத்துக்காட்டு. 


ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR