வேம்பின் இலை மற்றும் வேப்பம் பூவை பயன்படுத்தி மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று தெலுங்கானா மருந்தியல் ஆய்வாளர்கள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மையம் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் ஆய்வாளர்கள் மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதற்கு புதிய மருந்துகளை கண்டறிய ஆய்வை மேற்கொண்டனர். 


மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, பரிசோதனை முயற்சியாக வேப்பிலையில் உள்ள ராசாயண கலவையை சிகிச்சையாக அளிக்கையில் நோயாளியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.  


இது குறித்து ஆராய்சியாளர் சந்திரய்ய கொடுகு கூறுகையில், "வேம்பில் உள்ள நிம்போலைட் (Nimbolide) எனும் ரசாயண கலவை மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை பெருமளவு கட்டுப்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரப்பி சிகிச்சையின் பக்க விளைவுகளையும் குணப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உள்ளது" என்றார். 


மத்திய அரசின் ஆயுஷ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி பங்களிப்புடன் இந்த புதிய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்த ஆராய்ச்சி குழு தீர்மானித்துள்ளது. 


மேம்படுத்தப்ப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்து கண்டுபிடிக்க நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
வேம்பினை நாம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அது குறித்த ஆய்வு முடிவுகள் மருத்துவத்துறையில் பெரும்பாலும் இல்லை என்றே கூற வேண்டும். இந்தியாவில் எண்ணிலடங்காத அளவில் வெப்பம் மரங்கள் உள்ளன. இதனை சரியான முறையில் பயன்படுத்தினார் புற்றுநோயை கீமோதெரப்பி  இல்லாமலே குணப்படுத்த முடியும் என ஆயிவாளர்கள் தெரிவித்துள்ளனர்!