ஆரோக்கியத்திற்கு பல குணங்கள் நிறைந்த உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் பலனளிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கருஞ்சீரகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கருஞ்சீரகம், பல நோய்களிலிருந்து தடுக்கிறது. கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த மசாலா, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் குறைத்து, அவற்றால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியத்திற்கு இப்படி பல ஆறுதல்களைக் கொடுக்கும் கருஞ்சீரகம், முடியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.


கருஞ்சீரகமும் ஆரோக்கியமான தலைமுடியும்


கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், முடியை கருமையாக்க உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி கருப்பாக மாற்றும் அதன் உயிர்வேதியியல் கலவை. அதே நேரத்தில், அதன் டெலோஜென் எப்லூவியம் முடி உதிர்வதைத் தடுக்கிறது.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


உண்மையில், மன அழுத்தத்தாலே முடி உதிர்கிறது. கருஞ்சீரகத்தில் உள்ள லினோலிக் அமிலம் முடியை கருமையாக்க உதவுகிறது. எனவே நல்லெண்ணியில் கருஞ்சீரகத்தை போட்டு காய்த்து, அதனை ஆறவைத்து  தலைமுடியில் தடவி வந்தால், முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.



அடர்த்தியான கூந்தலுக்கு கருஞ்சீரகத்தின் ஹேர் பேக்
கருஞ்சீரகத்தின் ஹேர் பேக் அடர்த்தியான கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், இதில் காணப்படும் லினோலிக் அமிலம், முடி வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இது வேர்களில் இருந்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


கருஞ்சீரகமும், எள்ளும் கூட்டணி அமைத்தால், அது முடிக்கு குதூகலத்தைத் தரும். எனவே, இரண்டையும் அரைத்து, தலையில் பூசி ஊறவிட்டு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | என்றும் இளமை! மனித சருமத்தை 30 ஆண்டுகள் இளமையாக்கிய விஞ்ஞானிகள் 


வழுக்கையைத் தடுக்க கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் பேக்
வழுக்கையைத் தடுக்க, கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தால் செய்யப்பட்ட ஹேர் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டும் முதலில் உச்சந்தலையை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


இந்த இரண்டுமே முடிக்கு ஊட்டச்சத்தை அளித்து அவை வேர்களில் இருந்து வளர உதவுகின்றன. இது தவிர, கருஞ்சீரகத்தில் உள்ள டெலோஜென் எஃப்ளூவியம் புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது, அதே நேரத்தில் வெந்தயத்தின் புரதம் அதன் வேர்களை பலப்படுத்துகிறது. இந்த வழியில், வழுக்கைத் தலையில் புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
 
பொடுகை நீக்க
பொடுகு கிட்டத்தட்ட முடிக்கு எதிரியாகவே செயல்படுகிறது. இதற்கு அருமருந்தாக செயல்படுகிறது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை ஊறவைத்த நீரில் எலுமிச்சை கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவினால், அது பொடுகு மற்றும் அரிப்புகளை நீக்க உதவும். 


வறண்ட கூந்தலுக்கு கருஞ்சீரக கண்டிஷனர்
கருஞ்சீரகம் வறண்ட கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கற்றாழையுடன் கருஞ்சீகத்தைக் கலந்து தலைமுடியில் தடவி வந்தால், அது கண்டிஷனர் போல செயல்படும். முதலில் உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து ஈரப்பதமாக்கி பின்னர் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது தவிர, கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முடியை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.


மேலும் படிக்க | மாம்பழமாம் மாம்பழம்: சுவை மட்டுமல்ல, இது அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR