கோடை காலம் வந்தாலே நம் மனதில் வரும் விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று மாம்பழம். கோடை கால துவக்கம் முதலே, மக்கள் மாம்பழத்திற்காக காத்திருக்கத் தொடங்குகிறார்கள். பழுத்த அழகான மற்றும் இனிப்பு மாம்பழங்களை சாப்பிட ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது!!
மாம்பழம் சுவையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் கோடையில் அனைவரும் மாம்பழத்தை உட்கொள்ள வேண்டும். இந்த பதிவில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கிறது:
உடல் பருமனைக் குறைக்க மாம்பழம் ஒரு நல்ல மருந்தாக உதவும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிகமாக பசி எடுப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி தேவையற்ற திண்பண்டங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது:
ஞாபக மறதி உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட வேண்டும். இதில் உள்ள குளுட்டமைன் அமிலம் என்ற தனிமம் ஞாபக சக்தியை அதிகரிப்பதில் ஊக்கியாக செயல்படுகிறது. மேலும், இதனால், இரத்த அணுக்களும் நன்றாக செயல்படுகின்றன. ஆகையால் மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பு பெறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மாம்பழத்தை உட்கொள்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.
சருமம் நன்றாக இருக்கும்:
மாம்பழக் கூழ் கொண்டு ஒரு பேக் போடுவதாலும், அல்லது, அதைக்கொண்டு முகத்தை தேய்ப்பதாலும், முகபொலிவு மேம்படுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
செரிமானம் நன்றாக நடக்கிறது:
மாம்பழத்தில் புரதங்களை உடைக்க வேலை செய்யும் பல நொதிகள் உள்ளன. இதன் காரணமாக உணவு விரைவாக செரிக்கப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், உடலில் உள்ள காரத் தனிமங்களை சமநிலையில் வைக்கிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது:
மாம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | தொப்பையைக் குறைக்க இந்த 5 பொருட்களை பயன்படுத்தினால் போதும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR