மன அழுத்தம் `மூளைக்கு` நல்லது! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட அளவிலான மன அழுத்தம் உங்கள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
Stress Management: மனஅழுத்தம் எந்த மனிதனின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல, அது மனித உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் இதுவரை கேள்விப்பட்டு படித்திருக்கிறோம். ஆனால், தற்போது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ள உண்மைகளை வைத்து விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளனர். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சியில், மிதமான மற்றும் குறுகிய கால கட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் உங்கள் மூளைக்கு நல்லது என்பது தெரியவந்துள்ளது.
மனநல ஆராய்ச்சியில் வெளியான தகவல்
மனநல ஆராய்ச்சிக்குப் பிறகு மருத்துவ இதழில், இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த முதல் மிதமான அளவிலான மன அழுத்தம், நெகிழ்ச்சித்தன்மையை வளர்த்துக் கொள்ளவும், மனநலக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. குறைந்த மற்றும் மிதமான அளவிலான மன அழுத்தம் என்பது, பெரிய மற்றும் சாத்தியமான எதிர்கால அழுத்தங்கள் (மனநல கோளாறுகள்), மனச்சோர்வு மற்றும் அசாதாரண சமூக நடத்தை ஆகியவற்றிற்கு இரையாகாமல் ஓரளவிற்கு உங்களை காப்பாற்றும். இதன் பொருள் லேசான பதற்றம் அல்லது மன அழுத்தம் இருந்தால், இது உங்கள் மூளையின் செயல்பாடுகள் சரியாக இயங்க உதவுகிறது.
பேராசிரியரின் கூற்று
ஆய்வின் முதன்மை ஆசிரியரும், குடும்பம் மற்றும் நுகர்வோர் அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியருமான ஆசஃப் ஓஷ்ரி இது குறித்து கூறுகையில், ' லேசான மற்றும் மிதமான மன அழுத்தத்தின் மூலம், எதிர்கால நெருக்கடியைச் சமாளிக்க உங்கள் மனதில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும். இந்த லேசான மற்றும் குறுகிய கால மன அழுத்தம் உங்களை திறமையான மற்றும் பயனுள்ள ஒன்றாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
அதிர்ச்சியூட்டும் தகவல்
இந்த ஆய்வின் ஆசிரியர்கள் சில எடுத்துக்காட்டுகள் மூலம் தங்கள் கருத்தை விளக்க முயற்சித்துள்ளனர். அவரைப் பொறுத்தவரை, பரீட்சைக்கு சற்று முன்பு படிக்கும் போது ஏற்படும் மன அழுத்தம், வேலை செய்யும் இடத்திலோ அல்லது வீட்டிலோ எந்தவொரு பெரிய சவாலையும் சமாளிக்க உங்களை ஊக்குவிக்கும். அதே நேரத்தில், அலுவலக வேலை அல்லது பெரிய வணிக கூட்டத்திற்கு தயாராகும் போது ஏற்படும் மன அழுத்தம் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒரு வெளியீட்டாளரின் நிராகரிப்பு, ஆசிரியர் தனது எழுத்து நடை அல்லது விஷயத்தை மறுபரிசீலனை செய்ய காரணமாகிறது. இந்த லேசான பதற்றம், அந்தந்த துறையில் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய மக்களை ஊக்குவிக்கும்.
லேசான மன அழுத்தம் தடுப்பூசி போன்றது
இருப்பினும், குறைந்த மன அழுத்தத்திற்கும், சரியான அளவில் அதிக மன அழுத்தத்திற்கும் மிக சிறிய வித்தியாசம் இருப்பதாகவும், இதைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்றும் அவர் கூறினார். யூத் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட்டை இயக்கிய ஓஷ்ரி, 'நீங்கள் சில கடினமான வேலைகளைச் செய்யும்போது, அந்த நேரத்தில் உங்கள் சருமத்தில் சிறிது வறட்சி ஏற்படும். பின்னர் உங்கள் தோல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும். நல்ல மன அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பூசியாக செயல்படும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ