உடல் பருமன் தான் பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும் தொப்பை கொழுப்பு மிகவும் ஆபத்தான வகை கொழுப்பு. இது உங்கள் உறுப்புகளைச் சுற்றி குடியேறி இதய நோய், நீரிழிவு மற்றும் பிற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் இடுப்பை சுற்றியுள்ள பகுதியில் கொழுப்பு  குறையாமல் இருந்தால், உங்கள் உடல் நோய்களின் கூடாரமாக ஆகி விடும் என்று மருத்துவர்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் உடல் பருமன் குறையாமல் இருப்பதற்கு உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களும் ஒரு முக்கிய காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்... உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் சில, பல வழிகளில் தொப்பை கொழுப்பை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் சாப்பிடுவதைத் தவிர, தொப்பை கொழுப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் அல்லது உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைப்பதைத் தடுக்கும் பல பழக்கங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.


தொப்பை கொழுப்புக்கான காரணங்கள்
1. சாப்பிடும் போது ஏற்படும் கவனச் சிதறலகள்


நீங்கள் சிற்றுண்டி சாப்பிடும்போது உங்கள் ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்வதற்குப் பதிலாக, உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள் மற்றும் சுவைகளை அனுபவிக்கவும். உண்ணும் போது எவ்வளவு கவனத்துடன் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு குறையும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள், கவனமாக மென்று சாப்பிடுங்கள். உணவை மென்று மெதுவாக சாப்பிடவில்லை என்றால், வயிறு நிறைந்ததை உணராமல் அதிகமாக சாப்பிடுவீர்கள். ஏனென்றால், இந்த நிலையில், உங்கள் வயிறு நிறைந்தது எனற சமிக்ஞையை நரப்புகள் உங்களுக்கு வழங்காது.


2. மிக வேகமாக சாப்பிடுவது


உங்கள் வயிறு நிரம்பியுள்ளது என்ற செய்தியை மூளை பெற சுமார் 20 நிமிடங்கள் ஆகும். நீங்கள் மிக கிக வேகமாக சாப்பிட்டு வயிற்றை விரைவாக நிரம்ப செய்தால், உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடுவீர்கள். மெதுவாக சாப்பிடுபவர்கள் குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அதிக எடை அதிகரிப்பதைத் தடுக்கிறார்கள்.


மேலும் படிக்க | முளை விட்ட வெங்காயத்தில் இத்தனை நன்மைகளா... இது தெரியாம போச்சே...!!


3. மோசமான தூக்கம்


ஒரு ஆய்வில், ஒரு இரவில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் 40 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களை விட அதிக தொப்பையை பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. ஆனால் உங்களுக்கு தூக்கமின்மை இருந்தால், அதைச் சரிசெய்வதற்கு அளவிற்கு அதிகமாகவும் தூங்காதீர்கள் இரவில் 8 மணிநேரத்திற்கு மேல் தூங்குவதும் தொப்பை கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.


4. தாமதமாக இரவு உணவு


மாலையில் சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், உங்கள் செரிமான அமைப்பு உங்கள் உணவை எரிக்கும் வேலையைச் செய்ய நேரம் கொடுங்கள். நீங்கள் கலோரிகளை எவ்வளவு தாமதமாக உட்கொள்கிறீர்களோ அல்லது பின்னர் நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு நேரம் உங்கள் உடல் அவற்றை பயன்படுத்தவும் எரிக்கவும் எடுக்கும். மேலும் சரியாக ஜீரணமாகாது. இதன் விளைவாக உங்கள் எடை அதிகரிக்கிறது.


5. மைதா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்


மைதா உணவுகள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து செரிமானதிற்கான நார்ச்சத்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.  இதனால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கும்.  உங்கள் இரத்த சர்க்கரையையும் அதிகரிக்கிறது. காலப்போக்கில், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். அதற்கு பதிலாக முழு தானிய கார்போஹைட்ரேட்டுகளை தேர்வு செய்யவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ