முளை விட்ட வெங்காயத்தில் இத்தனை நன்மைகளா... இது தெரியாம போச்சே...!!

வெங்காயம் முளை விட்டால், அதனை பலர் தூக்கி எறிந்து விடுகின்றனர். ஆனால் முளை விட்ட வெங்காயத்தில் சத்துக்கள் பன்மடங்காகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2023, 04:24 PM IST
  • முளை விட்ட வெங்காயத்தில் சத்துக்கள் பன்மடங்காகின்றன.
  • பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.
  • முளை விட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
முளை விட்ட வெங்காயத்தில் இத்தனை நன்மைகளா... இது தெரியாம போச்சே...!! title=

முளை விட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: வெங்காயம் இந்திய சமையலறையில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். வெங்காயம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் ஆன்டி-ஃப்ளேவனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளன.  இது வீக்கத்தைத் தடுக்கவும், ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்தும் வெங்காயம் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. வெங்காயத்தில் அதிக அளவு குவெர்செடின், ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த வெங்காயம் முளை விட்டால், அதனை பலர் தூக்கி எறிந்து விடுகின்றனர். ஆனால் முளை விட்ட வெங்காயத்தில் சத்துக்கள் பன்மடங்காகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை

 வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடலுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்களை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். ஆனால் முளைத்த வெங்காயத்தை உட்கொள்வது உடலுக்கு பன்மடங்கு நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முளைத்த வெங்காயம் உங்களின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். வெங்காயம் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். முளைத்த வெங்காயத்தை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்?

வெங்காயம் எப்படி முளைக்கிறது?

வெங்காயம் முளைப்பதற்கு ஈரப்பதம் முக்கிய காரணம். உண்மையில், வெங்காயத்தை நட்டுத் தான் தான் புதிய வெங்காய செடி வளர வேண்டும். எனவே முளைப்பது இயற்கையான நிகழ்வு. முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படும் வரை அவை வளர்ச்சியடையாமல் இருக்கும். அவை வளர்ந்தவுடன், புதிய வளர்ச்சி தொடங்குகிறது.

முளைத்த வெங்காயத்தை சாப்பிடுவது பாதுகாப்பானது

முளைத்த வெங்காயம் ஆரோக்கியமானதா அதனை சாப்பிடுவதால் பாதிப்பு வருமா என பலருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. கவலையே படாதீர்கள்... ஆம், வெங்காயம் முளைத்த பிறகு தாராளமாக சாப்பிடலாம், அது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது. இது உங்கள் ஆரோக்கியத்தை எந்த வகையிலும் பாதிக்காது. 

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

முளைத்த வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

1. முளைத்த வெங்காயத்தை உண்பதால், அதில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களைப் பாதுகாக்கிறது. இது தவிர, இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் டி, துத்தநாகம், பி வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிறது. 

2. முளைத்த வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலுக்கு ஏராளமான நார்ச்சத்து கிடைக்கிறது, இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். அவற்றில் நார் சத்து மற்றும் புரதம்  அதிக உள்ள நிலையில், உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, முளைத்த வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்கவும் உதவியாக இருக்கும்.

3. முளைத்த வெங்காயத்திலும் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. முளைத்த வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டை நீக்கி, உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.

4. கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் பண்புகள் முளைத்த வெங்காயத்திலும் உள்ளன. நீங்கள் தினமும் மற்றும் குறைந்த அளவு உட்கொண்டால், அது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

குறிப்பு: முளைத்த வெங்காயத்தை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், உங்களுக்கு அதனை சாப்பிடுவதால் பிரச்சனை ஏதும் இருந்தால், இந்த சூழ்நிலையில் நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News