வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... எலுமிச்சையில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள்
எலுமிச்சை பழம் உணவு வகைகளின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அற்புத பழமாகும்.
எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்:எலுமிச்சை பழம் உணவு வகைகளின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அற்புத பழமாகும்.. மாறிவரும் பருவங்களில், சளி, ஜலதோஷம், வைரஸ் தொற்று அபாயம் அதிகரிக்கிறது. சளி, இருமல்,மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்ப்டாமல் தடுக்க எலுமிச்சை பழம் உட்கொள்வது மிகவும் நல்லது என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுகிறார்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உடலை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற பருவகால பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். மாறும் பருவத்தில் ஏன் உட்கொள்ள வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் (Health Tips) என்ன என்பது குறித்து அவர் கூறுவதை அறிந்து கொள்வோம்.
எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாக கருதப்படுகிறது.இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மாறிவரும் பருவத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதால் வைட்டமின் சி தேவை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த சீசனில் எலுமிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.
கண் பார்வை கூர்மை அதிகரிக்கும்
வைட்டமின் சி உடன், எலுமிச்சையில் வைட்டமின் ஏ சுவடுகளும் உள்ளன, அவை நம் கண்களுக்கு மிகவும் முக்கியம். இவை கண்களுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கி பார்வையை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை
எலுமிச்சை பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும், இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது தவிர, எலுமிச்சையில் நார்ச்சத்தும் உள்ளது. இது கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை
எலுமிச்சை சாறு, செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவு எளிதாக ஜீரணிக்கப்படுகிறது. எடையை இழக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். சில நாட்களில் கொழுப்பு குறையும்.
உடலை டீடாஸ் செய்யும் ஆற்றல் கொண்ட எலுமிச்சை
உணவில் புளிப்பு சுவையை சேர்க்க, சிறந்த தேர்வாக உள்ள எலுமிச்சம் பழத்தை பிடிக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள எலுமிச்சை, உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றலை கொண்டது. எனவே, உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் எலுமிச்சை சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ