வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். அதே போல் வெந்தயக் கீரையும் மிகவும் நன்மை பயக்கும். சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். ஆனால், அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெந்தயத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், ஃபோலிக் ஆசிட், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பது, தாய்ப்பாலை ஊறச் செய்வது, உடல் பருமனை குறைப்பது (Weight Loss Tips), செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகளை வெந்தயக் கீரை அள்ளி வழங்குகிறது.


வெந்தயத்தின் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வெந்தய விதைகளின் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியாவில் உள்ள சவூதி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வெந்தயத்தில் நீரிழிவு, புற்றுநோய் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பாலியல் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கு ஆற்றல் மற்றும் ஹைபோகொலெஸ்டிரோலெமிக் பண்புகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


வெந்தயம் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ள நிலையில், வெந்தயத்தை ஏதோ ஒரு தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிறந்த வழி என்று கண்டறியப்பட்டது.


வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் சுவையான வழிமுறை


வெந்தய பரோட்டா: பொதுவாக குழந்தைகளை வெந்தயக் கீரை சாப்பிட வைப்பது சற்று கடினம். அதனால் வெந்தயக்கீரையை பரோட்டாவாக தயாரித்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும். சாப்பாத்தி மாவில் பொடியாக நறுக்கிய வெந்தியக்கீரை, துருவிய இஞ்சி, துருவிய பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி சிறிது மிளகாய்பொடி, சிறிதளவு ஓமம், சிறிதளவு நெய் சேர்த்து, ப்ரோட்டா செய்தால், அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.


மேலும் படிக்க | தொப்பை கரைய... கொழுப்பை எரிக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 10 கட்டளைகள்


வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்


நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தும் வெந்தயம்


நீரிழிவு நோயில் வெந்தயத்தின் நன்மைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஒரு நபரின் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவும் குறைகிறது.


கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெந்தயம்


வெந்தயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் வெந்தயம் உதவுகிறது.


வெந்தயத்தின் பிற ஆரோக்கிய நன்மைகள்


வெந்தயத்தில் உள்ள ஆன்டிவைரல் பண்புகள் தொண்டை வலிக்கான சக்திவாய்ந்த மூலிகை மருந்தாக அமைகிறது. வெந்தயம் முடி உதிர்தல், மலச்சிக்கல், குடல் செயலிழப்பு, சிறுநீரக நோய், தீக்காயம், ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை மற்றும் பிற வகையான பாலியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கூட பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ