Heart Attack: சமீப காலமாக நம்மை சுற்றி பலருக்கு மாரடைப்பு வருவதை பார்க்கிறோம். பலர் பரிதாபமாக இதனால் இறப்பதையும் கண்டுள்ளோம். சில நாட்களுக்கு முன்னர், ஹிந்தி சின்னத்திரை நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் காலமானார். இரவில் தூங்கிய விகாஸ் சேத்தி காலையில் எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டார்.
மருத்துவ பரிசோதனையில் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவருக்கும் தூக்கத்தில் மாரடைப்பும் ஏற்பட்டது. விகாஸ் பல படங்கள் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர். 48 வயதான விகாஸ் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு வருவதற்கு முந்தைய நாட்களில், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
தூக்கத்தில் ஏன் மாரடைப்பு வருகிறது? இதற்கான காரணங்கள் என்ன? வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதன் அறிகுறியா?
தூங்கும்போது மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?
தூங்கும் போது மாரடைப்பு ஏற்படலாம் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது எப்படி நிகழ்கிறது? 10 பேரில் 5% பேர் தூக்கத்தின் போது மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தூக்கத்தின் போது உடலின் தசைகள் ஓய்வெடுக்கின்றன. இதன் காரணமாக, தூக்கத்தில் ஒரு நபரின் கழுத்து மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இது சுவாசக் குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இந்த அழுத்தம் காரணமாக, இந்த நேரத்தில் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கும் இரவில் தூங்கும் போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் இவர்களின் உடலில் இரத்த ஓட்டம் இரவில் சரியாக நடைபெறுவதில்லை. இப்படிப்பட்ட நிலை, பெரும்பாலும் குளிர்காலத்தில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாரடைப்புக்கு முன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சில அறிகுறிகளும் இதில் அடங்கும். சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு அதிக அசிடிடி, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தா வாழைப்பழம் பக்கம் போகாதீங்க...
மாரடைப்பு: இதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன?
- குறைவாக தூங்குவது அல்லது அதிகமாக தூங்குவது.
- உறக்கத்தில் இருந்து திடீரென விழித்துக்கொள்வது.
= அடிக்கடி தூங்குவது.
- தூக்கத்தில் குறட்டை விடுவது.
- மூச்சு விடுவதில் சிரமம்.
மாரடைப்பு வராமல் எப்படி பாதுகாப்பது?
- தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சி செய்யுங்கள்.
- சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது செக் அப் செய்துகொள்ள வேண்டும்.
- இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ