முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. மேலும், இதில் கலோரி அளவும் மிகக் குறைவு. முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பயறு, முளை கட்டிய கொண்டைக் கடலை ஆகியவை தான். முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வெந்தயம் சமையலில் இன்றியமையாமல் பயன்படுத்தப்படும் மசாலா. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் வைத்தால், அவை முளைக்கும். முளை கட்டும் போது, ​​வெந்தய விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு பன்மடங்கு அதிகரிக்கிறது. முளை கட்டிய வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டும் போது, அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, அதில் உள்ள வைட்டமின் சி சத்தும் அதிகரிக்கிறது. இந்த சத்துக்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
 
முளை கட்டிய வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்


1. முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முளை கட்டிய வெந்தயம் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.


2. முளை கட்டிய வெந்தயத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு (Weight Loss Tips) வரப்பிரசாதமாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து பசியையும் கட்டுப்படுத்துகிறது.


3. முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது. இது நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் முளை கட்டிய வெந்தயம் உதவுகிறது.


4. முளை கட்டிய வெந்தயத்தில் ஏராளமான நார்ச்சத்து உள்ள நிலையில், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைக்கிறது.


மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்


5. முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. இதனால், இளமையாக இருக்கலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொடுகு பிரச்சனையையும் குறைக்கிறது.


6. முளை கட்டிய வெந்தயத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்பார்வையை கூர்மையாக்க வைட்டமின் ஏ அவசியம். அதோடு, முளை கட்டிய வெந்தயத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளதால் கண்களின் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது. 


முளை கட்டிய வெந்தயத்தை உணவில் சேர்ப்பதற்கான வழிகள்


1. முளை கட்டிய வெந்தயத்தை சிறிது வேக வைத்து சாம்பார் அல்லது பொரியலில் சேர்க்கலாம்.


2. முளை கட்டிய வெந்தயத்தை காலையில் சாலட்டாக சாப்பிடலாம்.


3. முளை கட்டிய வெந்தயத்தை மாவில் கலந்து சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம்.


4. முளை கட்டிய வெந்தயத்தை தயிர் அல்லது ஸ்மூத்தியில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.


5. முளை கட்டிய வெந்தயத்தை சூப்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய... சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ள வேண்டிய... சில சூப்பர் பானங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ