Pain killer: வலி நிவாரணி மருந்துகளில் இவ்வளவு பிரச்சனையா? இதுக்கு வலியே தேவலாம்!
தேவையில்லாத சமயத்தில் வலி நிவாரணிகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்...
புதுடெல்லி: பொதுவாக, உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதிலிருந்து விடுபட அடிக்கடி வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என்பது ரிரூபணமான உண்மை ஆகும்.
இந்த விஷயத்தை தெரிந்துக் கொண்டால், தெரியாமல் செய்யும் தவறில் இருந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
வலி நிவாரணி இதயத்திற்கு ஆபத்தானது
சாதாரண வலி நிவாரணி மருந்தான Diclofenac ஐப் பயன்படுத்துவது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பெரிய இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதுகுறித்து மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ALSO READ | எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’
BMJ இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, எந்த மருந்து, பாராசிட்டமால் மற்றும் பிற வழக்கமான வலி நிவாரணிகளுடன் டிக்ளோஃபெனாக் பயன்பாட்டை ஒப்பிடுகிறது.
வலி நிவாரணி மருந்தின் உறையிலேயே அது ஆபத்தானது என்று எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுவது ஏன் தெரியுமா?
டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், டிக்ளோஃபெனாக் மருந்தை, பொது விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என்றும், அப்படி அது விற்கப்பட்டால், பாக்கெட்டின் முன்பகுதியில், இந்த மருந்தின் சாத்தியமான அபாயத்தை குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
Diclofenac மருந்து என்றால் என்ன?
Diclofenac என்பது ஒரு பாரம்பரிய ஸ்டெராய்ட் இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (Nonsteroidal Anti-Inflammatory Drug) ஆகும், இது வலி மற்றும் வீக்கத்திற்கான சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி டிக்ளோஃபெனாக் தொடங்கும் நபர்களின் இருதய நோய் அபாயத்தை மற்ற NSAID மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடுகிறது.
நீண்ட காலம் வலி நிவாரணியை பயன்படுத்துவது என்பது துஷ்பிரயோகம் என்றே சொல்லலாம். இதனால், உடல் எடை அதிகரிப்பு, கடுமையான இருதய பிரச்சினைகள், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஓரிரு நாட்களுக்குப் பிறகு வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். வலிநிவாரணியை அதிகமாக பயன்படுத்துவதால், மலச்சிக்கல், வீக்கம், வயிறு பெரிதாவது, குடல் அடைப்பு மற்றும் மூல நோய்க்கு வழிவகுக்கும்.
ALSO READ | கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR