முட்டை எப்போதுமே விவாதங்களை ஏற்படுத்தும் உணவு. சைவமா இல்லை அசைவமா என்ற சர்ச்சைக்கும் முட்டைக்கும் உள்ள உறவு அதன் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கருவைப் போல ஒன்றுடன் ஒன்று பிணைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற விடை காணப்படாத கேள்வி என முட்டை எப்போதும் விவாதங்களில் உள்ள ஒரு உணவுப் பொருள்.


உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு உத்தரவாதம் (Healthy Food) தருவதாக நம்பப்படும் முட்டையில் புரதம், விட்டமின் டி, விட்டமின் பி 12, பயோட்டின், ரைபோஃப்ளேவின், தியாமின், செலினியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளன.


இதனால், தினசரி முட்டையை உணவில் அத்தியாவசமாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். முட்டையே வேண்டாம் என்று அதை தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.


Also Read | நீங்க பிஸ்தாவா? இருந்தாலும் இந்த உலர்பழத்தை சாப்பிட வேண்டாம்!


ஆனால், யார் முட்டையை சாப்பிடக்கூடாது என்று அறிவியல் சொல்கிறது தெரியுமா? 
தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதய நோய் வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள்ல் கரு உடல் எடையைக் கூட்டும் என்பது மட்டும் இல்லை. சர்க்கரைநோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிட்டால், அவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். 



ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமிற்கு மேற்பட்ட கொழுப்பை உட்கொண்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் இருப்பதாகவும் உயிரிழக்கும் அபாயம் 18 சதவீதம் இருப்பதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
முட்டையில் உள்ள அதிக அளவிலான கொழுப்புச் சத்து பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.


உடல் ஆரோக்கியத்திற்காக நாம் உண்ணும் உணவே நமக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால், முட்டையை சாப்பிடுவதா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. 


ALSO READ | 40+ ஆண்களின் டயட்டில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய பொருட்கள்!


சமைக்கப்படாத முட்டைகளை சாப்பிட்டால் வாந்தி, வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்ல, உடலின் சில பாகங்களில் வீக்கம் ஏற்படும். ஆனால், எதையும் அளவுடன், முறைப்படி சாப்பிட்டால் (Healthy Food)எந்தப் பிரச்சனையும் வராது.


முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள் என சத்தான கூட்டணி அமைத்து சாப்பிட்டால் அது நலம் கொடுக்கும் வரமாக இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சாபமாக மாறும். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 


ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்து அவசியம் என்பதால், முட்டையை விலக்க வேண்டாம். முட்டையை அளவோடு உண்டால், ஆரோக்கிய வளத்தைப் பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | விலையுயர்ந்த க்ரீம்களுக்கு டஃப் கொடுக்கும் ஆரஞ்சு பழச்சாறு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR